சீனாவில் நடைபெறவுள்ள கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவிருந்த இலங்கை வீரர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் வீடு திரும்பினர்!

03 Sep, 2025 | 03:17 PM
image

சீனாவில் நடைபெறவுள்ள 23ஆவது ஆசிய கராத்தே சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சீனாவின் ஷாவோகுவான் நகரத்தை நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற 31 இலங்கை வீரர்கள் விசா இல்லாத காரணத்தினால் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். 

ஆசிய கராத்தே சுற்றுப்போட்டி செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சீனாவின் ஷாவோகுவான் நகரத்தில் நடைபெறவுள்ளது.

ஆசியாவைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தால் தெரிவு செய்யப்பட்ட 31 இலங்கை வீரர்கள் ஒன்றரை மாத காலமாக பயிற்றுவிக்கப்பட்டனர். 

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இலங்கை வீரர்கள் குழுவில் பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர். 

இந்த இலங்கை வீரர்கள் குழு நேற்று செவ்வாய்க்கிழமை (02) காலை 11.00 மணியளவில் சீனாவின் ஷாவோகுவான் நகரத்தை நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது இலங்கை வீரர்களுக்கான விசாக்களை கொண்டு செல்லவிருந்த இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருக்கவில்லை.

விசா இல்லாத காரணத்தினால் இலங்கை வீரர்கள் குழு சீனாவின் ஷாவோகுவான் நகரத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பின்னர், 31 இலங்கை வீரர்களும் ஏமாற்றத்துடன் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-06 20:36:50
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57
news-image

AFC 20இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-09-04 12:12:27
news-image

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச்...

2026-09-03 14:15:10
news-image

ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான...

2026-09-02 22:49:03
news-image

பிரதான கழகங்கள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்:...

2026-09-02 18:28:56
news-image

வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது...

2026-09-01 18:55:51
news-image

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் -...

2026-09-01 13:30:20
news-image

இனி கொடுப்பதற்கு எதுவும் இல்லை' என்ற...

2026-09-01 00:15:17