தகுதியானவருக்கு தலைமைத்துவத்தை வழங்க தயார் - சுதந்திர கட்சியின் தவிசாளர்

03 Sep, 2025 | 03:16 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக் கூடிய இயலுமையுடைய எந்தவொரு நபருக்கும் கட்சி தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தான் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து கோரிக்கை விடுத்தால் அது குறித்து ஆராய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை (03) கொழும்பு – டாலி வீதியிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற 74 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய நிமல் சிறிபால டி சில்வா,

புதிய குழுக்களுக்கு பொறுப்புக்களை கையளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இளைஞர், யுவதிகள் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும். எனக்கு ஜனாதிபதியாகும் கனவு இல்லை.

ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து ஜனாதிபதியாகக் கூடிய தகுதி தமக்கிருந்தால் அதனை நிரூபித்தால் பொறுப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம் என்றார்.

இதன் போது உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏனைய கட்சி உறுப்பினர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. அந்த பழிவாங்கலுக்குள் நானும் சிக்க வைக்கப்பட்டுள்ளேன்.

52 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன். நாட்டில் செயற்பாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் ஏதேனுமொரு வகையில் முடக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன கலந்து கொண்டிருந்ததோடு, சுதந்திர கட்சியின் மேலும் பல சிரேஷ்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09