சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது.

அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.