வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு ஒரு அத்தியாவசிய திறமையாக மாறியுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் தொழில்துறைகள் ஏற்கனவே மாறத் தொடங்கியிருப்பதுடன், தொழில்வாய்ப்புக்களும் இதற்கு ஏற்ற வகையில் உருவாகிவருகின்றன.
செயற்கை நுண்ணறிவில் நாளுக்கு நாள் மேம்பட்டுவரும் உலகின் தேவையை நன்கு அறிந்துகொண்டு, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence) பட்டப் பாடத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தப் பாடநெறியில் ரோபோட்டிக்ஸ் (Robotics), கணினிக் கண்ணோட்டம் (Computer Vision), இயந்திரக் கற்கை (Machine Learning), ஆளமான கற்கை (Deep Learning), க்ளவுட் கணினியியல் (Cloud Computing), நியூரோ கணினியியல் (Neuro Computing) மற்றும் செயற்கை நுண்ணறிவின் பொறுப்புவாய்ந்த பயன்பாடு போன்ற பிரதான விடயங்கள் இப்பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக் கலந்துரையாடல் நிகழ்வில் இன் கணினிப் பீடத்தின் உதவி துணைவேந்தர் பேராசிரியர் நுவன் கோதாகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பேராசிரியர் லசித் குணவர்தன, இன் இலங்கைக்கான இணைத் தலைவரும் நிலைத்தன்மை மற்றும் வசதிகளுக்கான உலகளாவிய தலைவர் டென்வர் டி சில்வா, at CoHEAD Therapeutics (United States) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம செயற்கை நுண்ணறிவு அதிகாரியும், சம்பத் வங்கியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் மூலோபாய நிபுணரும், நிறுவனத்தின் தலைவருமான துஷேர கௌடவத்த ஆகியோர் குழுக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டனர்.
கணினி பீடத்தின் உதவிப் பேராசிரியர் கலாநிதி.ஜீவனி பமுனுசிங்க குறிப்பிடுகையில், “செயற்கை நுண்ணறிவுப் பட்டப்பாடத்திட்டமானது தொழில்நுட்ப திறன்களைத் தாண்டி, முழுமையான அணுகுமுறையை வளர்க்கும் திறன் கொண்ட புத்தாக்கம் மின்ன தலைவர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
உலகளாவிய தொழில்துறையை மறுவரையறை செய்வதில் செயற்கை நுண்ணறிவு தொடர்ந்தும் பங்களிப்புச் செலுத்திவரும் நிலையில், SLIIT இன் செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானி (MSc in Artifical Inteligence)பட்டப் பாடத்திட்டம் துறைசார் நிபுணர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் திறனைக் கட்டியெழுப்ப ஆர்வமாகவிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆய்வு மற்றும் நிஜ உலகத் தீர்வுகளின் மூலம் பக்கபலமாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை www.sliit.lk என்ற இணையத்தளத்தில் அல்லது +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM