ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் சீன ஜனாதிபதியின் முன்மொழிவு - ஆக்கபூர்வமான முறையில் அணுகுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவிப்பு

02 Sep, 2025 | 06:09 PM
image

(நா.தனுஜா)

ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் 25ஆவது மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கினால் முன்மொழியப்பட்ட உலகளாவிய ஆட்சியியல் செயற்திட்டத்தை ஆக்கபூர்வமான விதத்தில் தாம் அணுகுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் 25ஆவது அரச தலைவர்கள் மாநாடு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகி, திங்கட்கிழமை (1) வரை சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது.

ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கண்காணிப்பாளர் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது. அதனடிப்படையில் இம்மாநாடு குறித்தும், மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆற்றிய உரை குறித்தும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில், 'இறையாண்மைசார் சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, பல்லினத்தன்மை, மக்கள்மைய அபிவிருத்தி, செயல் அடிப்படையிலான ஒத்துழைப்பு என்பவற்றை பிரதான கோட்பாடுகளாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கினால் முன்மொழியப்பட்ட உலகளாவிய ஆட்சியியல் செயற்திட்டத்தையும், அங்கு ஆராயப்பட்ட உலகளாவிய அபிவிருத்தி, பாதுகாப்பு, மக்கள்மயமாக்கல் செயற்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களையும் நான் மிகவும் ஆக்கபூர்வமானவையாகக் கருதுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27
news-image

ஒரு வருடத்தில் 63 பாதாள உலகக்...

2026-08-16 08:35:00
news-image

மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம்...

2026-08-16 08:33:16
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்;...

2026-08-16 08:27:38
news-image

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய -...

2026-08-16 08:25:11
news-image

ஜனாதிபதியிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைக்கவில்லை -...

2026-08-16 09:10:11
news-image

கல்கிஸ்சை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் பலி

2026-08-16 07:58:34
news-image

இன்றைய வானிலை

2026-08-16 06:15:35
news-image

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியதையும் ஊடகங்களுக்கு...

2026-08-15 19:14:20