'ஹனுமான்' படத்தின் மூலம் பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்த தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும்' மிராய்' திரைப்படம் - எக்சன் அட்வென்சர் ஃபேண்டஸி எமோஷனல் மற்றும் டிவோசன் நிறைந்த படம் என அப்பட நாயகனான நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்திருக்கிறார்.
இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மிராய் ' திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா , மனோஜ் மஞ்சு, ஜெகபதி பாபு, ரித்திகா நாயக் , ஜெயராம், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி .ஜி. விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 12ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் நாயகனான தேஜா சஜ்ஜா பங்கு பற்றினார்.
படத்தைப் பற்றி தேஜா சஜ்ஜா பேசுகையில் , '' மிராய் என்றால் 'எதிர்காலத்தின் நம்பிக்கை ' என்பது ஒரு பொருள். படத்தில் இதற்கான மற்றொரு பொருளும் உள்ளது. அதனை நீங்கள் வெள்ளி திரையில் காணுங்கள்.
'ஹனுமான்' படத்திற்கு அளித்த ஆதரவை போல் இந்த 'மிராய்' படத்திற்கும் உங்களின் பேராதரவை வழங்கி, வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM