அசைவ உணவுகளை தொடர்ச்சியாக பாவிப்பதால் இதய பாதிப்பு ஏற்படுமா?

02 Sep, 2025 | 03:36 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய வீடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் அல்லது வார இறுதி விடுமுறையாக இருந்தாலும் அசைவ உணவை தான் விரும்பி பசியாறுகிறார்கள். 

இது தொடர்பாக வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர்கள் கவலை அடைந்தாலும் இளைய தலைமுறையினர் இது தொடர்பாக எந்த எதிர்வினையையும் ஆற்றுவதில்லை. 

இந்நிலையில் அசைவ உணவுகளை தொடர்ச்சியாக பாவிப்பதால் இதய பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இதய மருத்துவ நிபுணர் விளக்கமளிக்கையில், '' ஐரோப்பியர்களும்,  மேலத்தேய நாட்டவர்களும் நாளாந்தம் தங்களது உணவில் அசைவத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.  

அவர்கள் அசைவ உணவுகளை தவறாமல் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் அசைவ உணவை அவர்களுக்கு தேவையான கலோரிகளில் மட்டுமே பசியாறுகிறார்கள்.  

ஆனால் எம்மவர்கள் கொர்போஹைட்ரேட் சத்தையும் , அசைவ உணவையும் இயல்பான அளவை விட கூடுதலாகவே ஒரே வேளையில் பசியாறுகிறார்கள். இதன் காரணமாகவே எம்முடைய உடலில் கெட்ட கொழுப்பு சத்து சேகரமாகி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.  

இதனால் அசைவ உணவை பசியாறுவதால் இதய பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதும், ஆனால் அதே தருணத்தில் அசைவ உணவை அகால வேளையிலும், தகாத முறையில் பசியாறினால்.. இதய பாதிப்பு ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.   

அத்துடன் நாளாந்தம் எம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு தேவையான கலோரிகளை கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சார்ந்த எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

வைத்தியர் சுரேஷ் குமார் தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47