தங்க நகை ஆபரணங்களின் சேமிப்பை உயர்த்துவதற்கான சூட்சும குறிப்பு..!?

02 Sep, 2025 | 03:03 PM
image

இன்று வரை எம்முடைய மக்களின் சேமிப்பாக கருதுவது தங்க நகைகளை தான். வேறு துறையில் முதலீடு செய்து இருந்தாலும் தங்கத்தின் மீதான முதலீட்டை பாதுகாப்பானது உறுதியானது என்ற நம்பிக்கை தான் முதன்மையான காரணம்.

இந்த நிலையில் எம்மில் சிலர் தங்கநகை ஆபரணங்களை கடினமாக உழைத்து வாங்குவார்கள். ஆனால் விரைவில் அதனை தக்க வைத்துக் கொள்ள இயலாமல் விற்று காசாக்கி விடுவார்கள்.

ஆனால் தங்க நகையை விற்று காசாக்கினால் நீங்கள் மீண்டும் தங்கம் வாங்குவதற்கு பல கோணங்களில் இருந்து தடை உண்டாகும். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்தது வியாழக்கிழமை என்றால் உங்களுக்கும், தங்கத்திற்குமான தொடர்பு என்பது உணர்வுபூர்வமானதாக இருக்கும்.

நீங்கள் எல்லா தருணங்களிலும் தங்க நகையை அணிந்திருக்க வேண்டும். அதுவே உங்களுக்கான அதிர்ஷ்டமாக இயங்கும். ஆனால் நண்பர்கள் , உறவினர்கள் யாரேனும் கண் பட்டு ... உங்களது மோதிரத்தை கடனாக கேட்டால் கொடுத்து விடுவீர்கள்.

ஆனால் கொடுக்கக் கூடாது என்பதுதான் விதி. அதை மீறி நீங்கள் கொடுத்து விட்டால் ... அதை அவர்கள் விவரிக்க முடியாத காரணங்களால் விற்று விட்டால்... உங்களால் ஒருபோதும் மீண்டும் தங்க நகையை வாங்கி அணிந்து கொள்ள இயலாத நிலை உருவாகும். இதற்கான தீர்வினையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் விடுமுறை தினம் என நாம் கொண்டாடும் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை  நான்கு மணி முதல் சூரிய உதயத்திற்கு 24 நிமிடங்கள் முன்பு வரை ஒரே ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி இந்த பிரபஞ்சத்தை வணங்கிட வேண்டும்.

இந்த பிரார்த்தனையின் போது எம்முடைய உடலின் மூலாதார ஆற்றலில் இருந்து புறப்பட்ட சக்கரத்தில் ஆற்றல் படிப்படியாக மேலே வந்து சனிக்கிழமையன்று உங்களது மூளை பகுதியில் இருக்கும்.

இந்தத் தருணத்தில் அவை மீண்டும் மூலாதாரத்தை அடையும் தருணமான ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்னதான காலகட்டத்தில்... நீங்கள் தீபமேற்றி பிரபஞ்சத்தை வழிபட்டால்,  உங்களுடைய மூலாதார ஆற்றல் வலிமை அடைந்து அந்த வாரம் முழுவதும் எதிர்பார்த்த சுப பலன்களை கிடைக்கும். இந்த தருணத்தில் நீங்கள் தங்கம் தொடர்பான முதலீடுகளையும், இழப்புகளையும் குறித்து மறுபரிசீலனை செய்தால்... நல்ல பலன் கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29