மண்ணியாகுளத்தில் பற்றியெரிந்த பனங்கூடல்: முறைப்பாடளித்தும் கண்டு கொள்ளாத பொலிஸார்

02 Sep, 2025 | 02:59 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட   வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த பனைமரங்களுக்கு தீ வைத்து எரித்து அழித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, 

மண்ணியாகுளத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான 24 ஏக்கர் வயலும், பனையும் சேர்ந்த காணிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பனங் கூடல்களுக்கு தீ வைத்து அழித்ததுடன், சில பனைமரங்களை முற்றாக வெட்டியும் அழித்துள்ளனர்.  

காணி உரிமையாளருக்கு ஊர் மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து இது தொடர்பில் பனை அபிவிருத்தி சபைக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் தங்களுக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமில்லை எனக் கையை விரித்ததுடன், பிரதேச செயலகத்துக்கு அறிவிக்குமாறும் கூறியுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் அக்கராயன் பொலிஸில் கடந்த 29.08.2025 வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

வடமாகாணத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்டங்களில்  கூறிக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட தரப்புகள் மௌனமாக இருப்பது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52
news-image

அநுர அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை அடகு...

2026-09-06 14:27:30
news-image

அநுரவின் வீதி மூடல் கெடுபிடிகளுக்கு பொதுஜன...

2026-09-06 16:13:24
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும்...

2026-09-06 16:14:05