ஒன்றரை நூற்றாண்டுக்கும் அதிகமான ஒரு நீண்ட வரலாற்றுக்கு உரிமையுடைய இலங்கை பொலிஸ் இன்று 03 ஆம் திகதியன்று தனது 159 ஆவது பொலிஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றது.
1866 செப்தெம்பர் 03 ஆம் திகதியன்று ஶ்ரீமத் ஜீ.டப்ள்யூ.ஆர் கெம்பல் அவர்கள் அரசியலமைப்பின் படி இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்ற தினமே பொலிஸ் தினமாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பொலிஸ் மா அதிபரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களில் 159 ஆவது பொலிஸ் தினம் கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகவே கருதப்படுகின்றது.
குற்றங்கள், போதைப் பொருள்கள், வீதி விபத்துகள் மற்றும் முறையற்ற ஆட்சிகளுக்கு எதிராக 24 மணித்தியாலங்கள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்காக 86,000 பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப் படை அடங்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். நாடுபூராகவும் பொலிஸ் கடமையை மேற்கொள்வதற்கு 30,000 பொலிஸ் உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ளதாக தற்போதைய பொலிஸ்மா அதிபர் அவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 608 பொலிஸ் நிலையங்களும், 45 பிரதேச பொலிஸ் பிரிவுகள் மற்றும் 78 செயல்பாட்டு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றது. மறுசீரமைப்பு செய்யப்பட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் கடமைகள் பொலிஸ் நிருவாகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் புதிய பரிமாணத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள சில பிரிவுகளினூடாக நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பயணத்தில் குற்றங்கள் மற்றும் ஊழல்களை தடுப்பதற்காகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பயன்படுத்தப்பட்ட நுட்பமான முறைகள் ஊடாகவும் புதிய தொழில் நுட்பங்களுடன் மிகவும் திறமையான பொலிஸ் சேவைகளை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் முகம் கொடுக்கும் பல்வேறு ஆபத்திலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும் பயம் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி தனது சொத்துக்களை பாதுகாக்ககூடிய சிறந்த சமூக சூழலை உருவாக்குவதற்காகவும் இலங்கை பொலிஸில் புதிய தொழிநுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமாக கைவிரல் அடையாளத்தை பரிசோதிக்கும் முறைகளும், சந்தேகநபர்களின் தனிப்பட்ட தகவல்களுடன் அடங்கிய முறைமைகளும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை தடைசெய்யும் நோக்கத்துடன் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமாநிலைய வளாகத்தில் சந்தேகநபர்களின் முகத்தை அடையாளம் காணும் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் சந்தேகநபர்கள் மாறுவேடங்களில் இந் நாட்டிற்கு வருகைத்தரும் போது அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
பெருந்தெருக்களில் ஏற்படும் வீதி விபத்துகள் மற்றும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும் போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருவதோடு வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் வீதி பாதுகாப்புகள் தொடர்பான நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இத் திட்டங்களுக்கமைய 24 மணித்தியாலங்களும் கொழும்பு நகரில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்களை தொழில்நுட்பத்தினூடாக கண்காணித்து வருவதுடன்இ குற்றங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றனர்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஊடாக வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கான ஒழுங்குமுறை திட்டமானது (Go Pay) தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
இலங்கை பொலிசில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 119 எனும் அவசர அழைப்புச் சேவைக்கு மேலதிகமாக 107 என்ற புதிய அவசர அழைப்பு சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சேவையானது தமிழ் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை தமிழ் மொழியில் முறையிடுவதற்கான வசதிகளையும் இலங்கை பொலிஸ் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அதேபோன்று நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு உடனடி உதவியை வழங்குவதற்காக 109 என்ற அவசர அழைப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இதனூடாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்களை விரைவாக முறையீடுவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இந் நடவடிக்கையானது 24 மணிநேரமும் பெண் பொலிஸார் சேவையில் அமர்த்தப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
பொலிஸில் தற்போது நடைமுறையிலுள்ள மற்றுமொரு தனித்துவமான சேவையாக 'பொலிஸ்மா அதிபருக்கு கூறுங்கள்' என்ற இணையத்தள சேவையைக் குறிப்பிடலாம். இதற்கான முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக இலத்திரனியல் சேவை என்ற பொலிஸ் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை அணுகிய பின்னர் க்ளிக் செய்து www.police.lk என்பதை அணுகுவதன் ஊடாக குறித்த முறைப்பாட்டை நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிப்பதற்கான இயலுமை பொதுமக்களுக்கு உள்ளது.
பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமையை பொறுப்பேற்றதற்கமைய பொலிஸ்மா அதிபருக்கு வட்ஸ்அப் ஊடாக ஊடாக குறுஞ்செய்தி மூலம் முறையிடுவதற்காக 071-8598888 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தியமை விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நபரும் தங்களுக்கு விருப்பமான தொழில் அல்லது வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தாலும் அத் தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் தடையகற்றல் அறிக்கையைப் பெறுவது அத்தியாவசிய விடயமாகும். அவற்றை பெற்றுகொள்ளும் நபர்களுக்கு மிகவும் செயல்திறனுடன் கூடிய அறிக்கையை வழங்குவதற்காக நிகழ்நிலை (Online) ஊடாக வழங்கப்படும் வசதிகளையும் மேலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இதனூடாக வழங்கப்படும் சேவையானது மகத்தான சேவையாகும்.
அதேபோன்று இலங்கை பொலிஸ் உத்தியோகப்பூர்வ இணையத்தளம்இ யூடியூப்இ முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பொலிஸார் பொதுமக்களுக்கு தகவல்கள் மற்றும் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனூடாக பொதுமக்களுடன் நெருங்கிய உறவை பேணுவது மாத்திரமின்றி நாட்டில் ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்கொள்கின்றனர்.
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை பொலிஸ் உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் பத்திரிகையான 119 எனும் செய்தித்தாள் ஒவ்வொரு மாதமும் பொலிஸாரின் பயன்பாட்டிற்காக பொலிஸ் ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிடப்பட்டு வருகின்றன.
புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்நது பொலிஸ் தொலைநோக்கு பார்வையாக குற்றங்கள் மற்றும் வன்முறைகளற்ற அமைதியான சூழலை உருவாக்குவதற்காக முன்னின்று செயல்பட்டு வருவதுடன், கடந்த காலத்தின் பொலிஸ் துறையின் பெருமையை மீட்டெடுப்பதற்காக குற்றவியல் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் ஊடாக பொலிஸ் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குதலின் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் போன்றவை மிகக் குறுகிய காலத்தில் தீர்ப்பதற்கு கனிஷ்ட, பரிசோதகர்கள் தரத்திலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவேற்றுத் தரங்களில் அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்தல், அவர்களின் நலன்புரிகளுக்காக பொலிஸ் நிலைய மட்டத்தில் நலன் திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் சிறந்த முறையில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பரிசில்கள் மற்றும் பாராட்டுதல்களும் வழங்குவதற்கான புதிய முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தகுதியற்ற உத்தியோகத்தர்களை அடையாளம் காண்பதற்காக புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், பொதுமக்களுக்கான தினத்தை ஒவ்வொறு வியாழக்கிழமைகளிலும் நடாத்துதல், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது குறைகேள் பிரச்சனைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கத்தை மிகச் சிறந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக ஊழல் செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குவதும், பொலிஸ் துறைக்கு கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாப்பதற்காக புதிய பொலிஸ்மா அதிபரின் முயற்சியாக கருதப்படுகின்றது.
159 ஆண்டுகாலமாக சமூகத்தை ஒன்றினைத்து செல்லும் பொலிஸ் பயணத்தில் சாதாரண பொலிஸ் கடமையினை மேற்கொள்ளும் போது மற்றும் செயல்பாட்டுச் சேவைகளில் ஈடுபடும் போது தங்களது உயிர்களை தியாகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நீண்ட காலச் சேவைகளுக்குப் பின்னர் ஓய்வுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் பெருமையுடன் நினைவு கூறுவதோடு இதுவரையிலான பயணத்தைத் தோளில் சுமந்து, இரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் உயிர் தியாகத்தால் நிறைவேற்ற முடியாத இப் பணியை 159 ஆவது பொலிஸ் தினத்தன்று கொண்டாடும் இச் சந்தர்ப்பத்தில் மிகுந்த பெருமையுடன் அனைவரையும் நினைவுக் கூறுவோம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM