அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பசுமாடு ஒன்றை ஏற்றிச்சென்ற லொறியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹட்டன் வெலிஓயா கீழ் பிரிவு தோட்டத்திலிருந்து வெலிஓயா மேல்பிரிவிற்கு கொண்டு செல்கையிலேயே இன்று மதியம்  லொறியுடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பசுமாட்டை வளர்ப்பதற்காக  தான் கொண்டு சென்றதாக சந்தேக நபர் தெரிவித்ததாகவும் அனுமதியின்றி கொண்டு சென்ற லொறி மற்றும் பசுமாட்டை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகநபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.