இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது தலைமையகத்தில் ஓவியக்கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வொன்றை தனது ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது.
ஊழியர்களின் நலன் பேணலில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. ‘Paint to Express’ எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்,
இலங்கையின் பாரம்பரிய முகமூடிகளை வர்ணம் தீட்டுமாறு ஊழியர்கள் ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனங்களில் உணர்வுகள்சார் நலன் என்பதில் பெருமளவு கவனம் செலுத்தப்படுவதில்லை. குறிப்பாக, வேகமாக இயங்கும் சூழல்களில், வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும். யூனியன் அஷ்யூரன்ஸ்
நிறுவனத்தில், பணிக்குழுவுக்கு நிபுணத்துவ ரீதியில் மட்டுமன்றி, உணர்வுபூர்வமான முறையிலும் ஆதரவளிக்கப்படும் நிலையில் உண்மையான வெற்றியை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதன் காரணமாக, உணர்வுபூர்வமான நலனை மேம்படுத்தும், உள்ளக மீட்சியை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
ஊழியர் ஈடுபாட்டிலும், நலனிலும் நியமங்களை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தவுள்ளதுடன், தனிப்பட்ட ரீதியிலும், நிபுணத்துவ ரீதியிலும் சிறப்பாக இயங்குவதற்கு புத்தாக்கமான அனுபவங்களை வழங்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,300 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM