நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களில் அரசியல்வாதிகள் தொடர்பு பட்டிருந்தால், அவர்களின் பெயர்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் (சமகி ஜன பலவேகய) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி தங்கள் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘அவர்கள் திருடர்கள்’ என்று முத்திரை குத்தி, சமூகமயமாக்க முயற்சியில் சில சமூக ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன.
இருப்பினும், அடக்குமுறைக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்துள்ளன. அந்த அடிப்டையில் எதிர்க்கட்சிகள் சமகி ஜன பலவேகயவின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளன.
அரசு குரங்குகள் கணக்கெடுப்புக்கு நிறைய பணம் செலவிட்டாலும், அதிலிருந்து எந்த முடிவும் இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு பலவிதமான வரையங்கள் இன்று நடக்காமல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM