மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகளை நீக்கி அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்  - வே. இராதாகிருஷ்ணன் 

02 Sep, 2025 | 12:19 PM
image

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்  என்று நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும்  மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு  அவர் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் 58 பேர் செய்த பணி தனியொரு ஆளுநரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று மாவட்டங்களின்  தேவைகளையும் கவனிக்க வேண்டியவராக உள்ளார். இதேபோல் ஏனைய எட்டு மாகாணங்களிலும் நிலைமை  உள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின், அதனை தீர்த்து வைத்து அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். 

ஆளுநர் என்ற தனி நபரால் பலரது பணிகளை மேற்கொள்ளும்போது தனி ஒருவரின் கீழ் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் உருவாகின்றன. மாகாண சபைகள் முடக்கப்பட்டுள்ளதால் கிராம மட்டத்தில் சில முடிவுகளை எடுப்பதில் தற்போது தடைகள் ஏற்பட்டுள்ளன. 

பலரால் எடுக்கப்பட வேண்டிய சில முடிவுகள் ஒரு சிலரது கையில் குவிக்கப்படுள்ளது. இதன் காரணமாகவே சில முடிவுகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

2025-12-17 17:34:29
news-image

ஏறாவூரில் விடுதியில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில்...

2025-12-17 16:26:09
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை சார் முச்சக்கர...

2025-12-17 17:42:03
news-image

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி,...

2025-12-17 15:43:07
news-image

அனர்தகால உதவிகளை மக்களுக்கு சென்றடைவதை அரச...

2025-12-17 17:31:21
news-image

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமான நிகழ்வை...

2025-12-17 17:30:29
news-image

கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

2025-12-17 17:29:37
news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கொத்மலை - ரம்பொடை பகுதியில் மீட்கப்பட்டது...

2025-12-17 17:28:57
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48