இலங்­கைக்குள் ‘உலகம்’ என எண்ணிக் கொண்டு கடந்த காலங்­களில் “ ஒபா­மா­வுக்கு” சவால் விடுத்து இலங்­கையை சர்­வ­தே­சத்­தி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று இன­வா­தத்தை ஊக்­கு­வித்து அர­சியல் குளிர்­காய்­கின்­றனர் என குற்றம் சாட்­டிய அமைச்சர் மஹிந்த அம­ர­வீர பௌத்த குருமார் தொடர்­பான சட்­ட­மூ­லத்தை மகா­நா­யக்­கர்கள் எதிர்த்தால் வாபஸ் பெறுவோம் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக கடற்றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில் கடந்த காலத்தில் பிர­பா­க­ரனை அழித்த எங்­க­ளுக்கு “ஒபாமா” ஒரு பொருட்­டல்ல என சவால் விடுத்து உல­கிற்­குள்தான் இலங்கை உள்­ளது என்­பதை மறந்து இலங்­கைக்குள் தான் உலகம் உள்­ளது என்ற நினைப்பில் உலக நாடுகள் பல­வற்றை பகைத்துக் கொண்டு சர்­வ­தே­சத்தில் எமது நாட்டை தனிமைப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட இலங்­கையை மீட்­டெ­டுத்து சர்­வ­தே­சத்தின் முழு­மை­யான ஆத­ரவை பெற்றுக் கொண்­டுள்ளார்.

உலகத் தலை­வர்கள் இன்று போட்டி போட்டுக் கொண்டு எமது நாட்­டுக்கு வர­வுள்­ளனர்.

அபி­வி­ருத்­தி­க­ளுக்கு தாரா­ள­மாக உதவ முன்­வந்­துள்­ளனர்.இன்று சர்­வ­தே­சத்தை நாம் வெற்றி கண்­டுள்ளோம். அதே­போன்று உள்­நாட்­டிலும் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து இணக்­கப்­பாட்டு தேசிய அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

இதன் கார­ண­மாக வரவு செலவுத் திட்­டத்தின் பல்­வேறு குறை­பா­டுகள் சுட்டிக் காட்­டப்­பட்டு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு மக்­க­ளுக்­கான வரவு செலவுத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

இதே­போன்று நாட்டின் தேசிய பிரச்­சினை உட்­பட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு எம்மால் தீர்­வு­காண முடியும்.இவ்­வாண்டு இடை­நி­றுத்­தப்­பட்ட அனைத்து அபி­வி­ருத்தி திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

அம்­பாந்­தோட்டை, மத்­தள விமான நிலை­யத்­தி­லி­ருந்து நெல் மூட்­டைகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு அதன் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.துறை­முக விஸ்­த­ரிப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­வேக நெடுஞ்­சாலை வேலை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்தும் இணக்­கப்­பாட்டு அர­சுக்கு கிடைத்த வெற்­றி­யாகும். இவ்­வாறு நல்­லாட்சி தொடரும் போது அதனை பொறுத்துக் கொள்ள முடி­யா­த­வர்கள் அர­சியல் வங்­கு­ரோத்து அடைந்­த­வர்கள்.

பௌத்த குருமார் தொடர்­பான சட்ட மூலத்தை முதன்­மைப்­ப­டுத்தி அர­சுக்கு எதி­ராக பிர­சா­ரத்தை முன்னெடுக்கின்றார்கள்.பௌத்த மதம் அழியப் போவதாக பிரசாரம் செய்கின் றனர்.

இதனை அரசு முன்வைத்துள் ளதே தவிர சட்டமாக்கவில்லை.மாநாயக்க தேரர்கள் எதிர்த்தால் இதனை நாம் வாபஸ் பெறு வோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.