ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின் பிறந்த நாளாக விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (31) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலையில் மேளதாளம் முழங்க ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
குறிப்பாக பத்து இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டுசெல்லப்பட்டு, குறிப்பாக பெரிய மண்வெட்டி தோட்ட ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து, கொட்டகலை பிரதேச சபை ஊடாக பிரதான வீதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, அந்த ஊர்வலம் கொட்டகலை ஆற்றங்கரைக்கு சென்றடைந்தது. பின்னர் அங்கே, ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டன.
இதன்போது அங்கு விசேட பூஜைகள், பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள் என்பன நடைபெற்றன.
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிலும் பிள்ளையார் ஊர்வலத்திலும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM