2025 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

01 Sep, 2025 | 05:13 PM
image

மேஷம்

விருப்பத்தை அடைய எதையும் செயல்படுத்தும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் பொது எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து செயற்படுவார். தனஸ்தானாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது தொழில் மேன்மை உண்டாகும்.

பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று பலம் பெறுவதால் பூர்வீக சொத்து சம்மந்தமான செயல்பாடுகள் சிறப்பாக பேசி முடிக்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். பேச்சு வார்த்தைக்கு முன் விநாயகரை வழிபட்டு சிதறு காய் அடித்து சென்று பேச ஆரம்பித்தால் சகல தடைகளும் நீங்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சுயசெல்வாக்கை தக்க வைத்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு சில தடைகள் வரும். உடல் நலனின் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

பண வர வேண்டிய இடத்தில் உடனே வராமல் சில தடைகள் வந்து சிரமத்தை தரும் எனினும் உங்களின் விடாமுயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தரும். சுமைகளாக இருந்து வந்த பல கஷ்டங்கள் படிப்படியாக விட்டு விலகும். உடன் இருந்த நண்பர்கள்கூட சில நேரம் உங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பது மனவருத்தத்தை தரும். எனினும் நல்லபடியாக எல்லாம் சிறு தாமதத்திற்கு பின்பு நடக்கும். உங்களின் பேச்சில் துடிப்பான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இனிய வார்த்தைகளால் பேசினால் எல்லாமே சுமூகமாக அமையும். வெற்றி பாதையில் செல்ல வழி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

26.09.2025 வெள்ளி மாலை 3 முதல் 28.09.2025 ஞாயிறு இரவு 02.24 மணி வரையும்.

30.08.2025 சனிக்கிழமை காலை 09.56 முதல் 01.09.2025 திங்கள் இரவு 07.12 மணி வரையும்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழன் காலை 6 - 7 மணிக்கு கொள்ளு பயிறை விநாயகருக்கு முன் வைத்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல தடைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

ரிஷபம் 

நிறைவான வாழ்க்கைக்கு சரியானதை தெரிவு செய்யும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்களின் எண்ணம் போல காரியம் நிறைவேறும் லாபாதிபதி குரு தனஸ்தானத்தில் இருப்பது நல்ல வாய்ப்பாக அமையும். எதிர்காலத்திற்கு தகுந்த நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சரியான தெரிவுகளை உருவாக்கி கொள்வீர்கள்.

தனாதிபதி புதன் வீட்டில் குரு அமர்ந்து உங்களுக்கு சேர வேண்டிய பொருளாதார வளங்களை கிடைக்க செய்வார். சரியான நேரத்தில் செயல்பாடுகளை ஊக்கபடுத்தி மேன்மையை அடைவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை உண்டாகும். நெருக்கடியான சில சூழ்நிலை மறையும். வேறு வாய்ப்புகளை தேடி போகாமல் உங்களுக்குரிய தொழிலில் ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

சுகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று புதனுடன் இணைவு பெறுவதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஆராய்ச்சி, அறிவாற்றல், பேச்சு திறமை, மனவலிமை பெற்று திறம்பட செயல்படுவீர்கள். காரண காரியமில்லாமல் யாரையும் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். எந்த வாக்குறுதியும் தர மாட்டீர்கள். கொடுத்தால் அதை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ.. அதை செய்வீர்கள். அரசியலில் முழு ஈடுபாடுகளை குறைத்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு உங்களின் சொந்த முயற்சியால் உங்களுக்கு பல வழிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். உறவுகளில் இருந்த மனகசப்பு நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

01.09.2025 திங்கள் இரவு 07.13 முதல் 04.09.2025 வியாழன் அதிகாலை 04.46 மணி வரையும்.

28.09.2025 ஞாயிறு இரவு 02.25 முதல் 01.10.2025 புதன் பகல் 12.06 மணி வரையும்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ வைத்து மிளகு கலந்து அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ள நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.

மிதுனம்

ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கொண்டு செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு அமர்ந்து பார்க்குமிடம் சிறப்பான பலன்களை தரும். ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது இன்னும் சிறப்பான பலன்களை பெற்று தரும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்து பொருளாதாரத்தில் மேன்மை அடைய செய்வார்.

உங்களின் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தின் பார்வையால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நற்பலன்களை பெற செய்வார். இனி வரும் காலங்களில் உங்களின் தேவைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வார். 

கலைத்துறை அன்பர்களுக்கு எல்லா நலன்கள் கிடைக்க பெறும் வாய்ப்புகள் உண்டாகும். ராசியில் இருக்கும் குரு ஆன்மீக சிந்தனைகளை தந்து தெய்வ வழிபாடுகளை செய்ய வைப்பார். அவர் பார்க்குமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். 

குலதெய்வ வழிபாடுகள் சிறக்கும். களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடக்கும். மனைவி மூலம் கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.

பாக்கியஸ்தானத்தில் சனியே அமர்ந்து அவரை குரு பார்ப்பதும் வெளிநாட்டு பயணம் செல்வது, புனித நீராடுவது, புதிய அனுபவங்களை பெறுவது... இதுபோன்ற அனுபவங்களை பெறுவீர்கள். நல்ல முயற்சிகளுக்கு நற்பலன்களை பெறுவதுடன் நினைத்த காரியம் கைகூடும். 

அரசியலில் பெரிய ஆர்வம் இருக்காது. ஆலோசனைகளை சொல்வதில் மிக திறமையானவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். கலைத்துறையினருககு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணிதவியலிலும், ஜோதிடத்திலும், ஆராய்ச்சியிலும் சிறப்பான நல்பலன்களை பெறுவீர்கள். இம்மாதம் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

04.09.2025 வியாழன் அதிகாலை 04.47 முதல் 06.09.2025 சனி பகல் 11.45 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு வண்ண பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றியும், சனிக்கிழமை பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் வழிபட்டு வேண்டிக்கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.

கடகம்

விவேகமும் மேன்மையும் கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானமான உச்ச வீட்டை பார்ப்பதால் பணபுழக்கம் நன்றாக இருக்கும். லாபாதிபதியும் ராசியில் அமர்ந்து ஏழாமிடத்தை பார்வை இடுவது உங்களின் கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வருமானத்திற்கு குறை இருக்காது. திறமையான உங்களின் வளர்ச்சி பெருமைக்குரியதாக அமையும்.

தனாதிபதி சூரியன் ஆட்சி பெற்று அட்டம ஸ்தானத்தில் சனி / ராகுவை பார்வை இடுவது மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று தரும். ஒரு சில நேரம் உங்களுக்கு உதவி செய்ய நல்ல நண்பர்கள் வருவார்கள். விரையஸ்தானத்தில் குரு அமர்ந்து செலவீனங்களை தருவார் என்பதால், அத்தியாவசிய செலவுகளை செய்து விட்டு பணத்தை வேறு சுபமான விடயங்களுக்கு பயன்படுத்திக்கொள்வது நல்லது.

அட்டம சனியையும் ராகுவையும் குரு பனிரெண்டாமிடத்திலிருந்து பார்ப்பதால் தேவையற்ற காரியங்களிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் இழுபறியில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். உடல்நலனின் கவனம் செலுத்தி உடல் மேன்மையை பெறுவீர்கள். அரசியலில் உங்களின் பதவிகளை தக்க வைத்துக்கொள்வீர்கள். புதிய அரசியல் நண்பர்கள் அறிமுகம் உங்களுக்கு ஊக்கம் பெற செய்யும். 

தனிபட்ட பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இளைய சகோதரர் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்வார். கலைத்துறையினர் பழைய நண்பர்கள் மூலம் சில வாய்ப்புகளை பெற்று வளம் பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். கணித பாடங்களில் சிறந்த வளர்ச்சியை எளிமையாக பெறுவீர்கள். 

லட்சியத்தை அடைய இதுவரை இருந்த தடைகளை நீக்கி வளர்ச்சியை பெறுவீர்கள். உங்களின் தூய்மையான மனத்திற்கு மக்களின் சக்தி மகத்துவமாக அமையும். 

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், ஞாயிறு.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

06.09.2025 சனிக்கிழமை பகல் 11.46 முதல் 08.09.2025 திங்கள் மாலை 04.31 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமை ராகு காலத்தில் காலை 09.00 - 10.30 பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த சாதம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள வளமான வாழ்க்கை மேம்படும்.

சிம்மம்

கடமையை உணர்ந்து தைரியத்துடன் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆட்சி பெற்று தனாதிபதி புதனுடன் இணைவு பெறுவதும் உங்களின் பொருளாதார வளம் சிறப்பாக அமையும். லாப ஸ்தான குரு மேலும் வளர்ச்சியை பெற்று தரும். அரசியலில் ஏற்றம் பெறுவீர்கள். சமு தாயத்தில் பிறர் மதிக்கும் வண்ணம் உங்களின் வளர்ச்சியை பெருக்கி கொள்வீர்கள். 

ஏழாமிடத்தில் சனியுடன் ராகு இணைவு பெற்று ராசியை பார்ப்பதால் எந்த காரியமும் உடன் நடக்காமல் சற்று தாமதமாக செயல்படும் என்றாலும் குரு பார்வை அந்த இடத்திற்கு இருப்பதால் அவர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். தொடர்ச்சியான செயல்கள் மதிக்ககூடிய வழிகளில் அமையும். யார் என்ன சொன்னாலும் யார் எதை செய்தாலும் உங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. மதிப்புமிக்க நண்பர்களின் தொடர்புகளால் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.

வாழ்க்கைக்கு எது தேவையோ அதனை அறிந்து உங்களின் செயல்கள் சிறப்பாக அமையும். மகாலெட்சுமி யோகம் சிலருக்கு கிடைக்கும். சூரியன் ஆட்சி பெற்று பலம் பெறுவதால் அரசியலில் உங்களின் செல்வாக்கு சிறப்பாக அமையும். கலைத்துறையினருக்கு அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் ஒப்பந்தங்கள் கிடைக்க பெற்று வளர்ச்சியை பெறுவீர்கள். சிலருக்கு வீண் அலைச்சல் இரவு கண் விழிக்கும் நிலைகளும் ஏற்படும்.

சரியான காலகட்டத்தில் உங்களின் கடமைகளை சரியாக செய்து அனைவருக்கும் உதவிகளை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது போட்டிகளில் வெற்றியை பெற்று பரிசுகள் பெறும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தாயார் உடல்நலன் நன்றாக இருக்கும். 

உடல்நலனின் பாதிப்பை பெற்று இருப்பவர்களுக்கு உடல் நலன் தேறி தீர்த்த யாத்திரை சென்று வர தாயாருக்கு வாய்ப்புகள் அமையும். பாடசாலை கல்வியில் பலருக்கு கல்வியில் அக்கறையுடன் படித்து உபதேர்வுகளில் நல்ல மதிப்பை பெறுவார்கள். உடலுக்கு உடன் எதையும் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

08.09.2025 திங்கள் கிழமை மாலை 04.33 முதல் 10.09.2025 புதன் இரவு 07.41 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு ராகு காலம் 04.30 - 06.00 மணிக்கு பைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபமிட்டு சிவப்பு அரளிப்பூ மாலை போட்டு வேண்டிக்கொள்ள சகல காரியமும் கைகூடும்.

கன்னி

கனவுகளை நனவாக்கிக்கொள்ள விரும்பி செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் சூரியனுடன் இணைந்து விரையஸ்தானத்தில் அமர்வது உங்களின் வெளியூர் பயணம் பயனுள்ளதாக அமையும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் அமையும். 

காலத்தையும் நேரத்தையும் அறிந்து செயல்படுவீர்கள். குறிப்பிட்ட இலக்குகளை தெளிவு செய்து உறுதியை பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களை முழுமையாக நம்பி செயல்படுவீர்கள்.

தனாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பது சிறப்பான பலனையும், வாழ்க்கையின் உறுதி தன்மையும், வளமும் பெறுவீர்கள். 

தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும் சத்ருஸ்தானத்தையும் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை பட்ட கடுமையான கஷ்டங்களையும், இனி படவேண்டிய அவசியம் இருக்காது தனிப்பட்ட பகை கொண்டவர்கூட இனி உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். 

வாகனம் வாங்குதல் வாகனத்தை புதுப்பித்து கொள்தல் போன்ற நற்பலன்களை பெறுவீர்கள். நல்ல காலமாக அமையும். சுருக்கமாக அனைவரிடமும் பேசுவீர்கள். லாபாதிபதி சந்திரன் மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக அமைவார். பணபுழக்கம் நன்றாக இருக்கும். 

குடும்ப கவலைகள் மறைந்து, குடும்ப ஒற்றுமையும், எதிர்கால நற்பலனும் பெறும் வகையில் அனைத்து விடயங்களும் அமையும். கணிணித்துறையிலும், பாதுகாப்பு பணியிலும் இருப்பவர்களுக்கு தனது பணியினை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். 

கலைத்துறையினர் கலை ஆர்வம் நன்றாக இருக்கும் இரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பை பெறுவீர்கள். கல்வியின் வளர்ச்சியை பெறுவீர்கள். தனக்கு எது தேவையோ அதனை பெற உங்களின் முயற்சிகளின் பலன் கிடைக்கும். திட்டமிட்ட சில காரியம் தாமதபட்டாலும் நடக்கும். பணபுழக்கத்த்திற்கு இருந்த தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிலும் மன வலிமையுடனும் தெளிவுடனும் செயல்பட்டு வளம் பெறுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

10.09.2025 புதன் இரவு 07.42 முதல் 12.09.2025 வெள்ளி இரவு 10.04 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து ஒன்பது தீபம் ஏற்றி, புளி சாதம் நைவேத்தியம் வைத்து, பக்தர்களுக்கு தானம் செய்து வர, சகல காரியமும் வெற்றியை தரும்.

துலாம்

காலத்தையும் சூழ்நிலையும் கருதி செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுகஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழில் சிறப்பாக அமையும். எதை நோக்கிய பயணமோ அதை செயல்படுத்தும் வலிமை பெறுவீர்கள். மக்களின் அன்றாட பிரச்சினைகளில் ஈடுபாடு கொண்டு செயல்படுவீர்கள்.

உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமர்வது உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கலை ஆர்வத்துடன் சிலர் சின்னத்திரை தொடர், நடிப்பு துறையில் சென்று, கல்லூரியில் உடன் படித்தவர் களுடன் வாய்ப்பு தேடும் பணியில் இருப்பீர்கள். லாபஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதும் உங்களின் வருமான வாய்ப்புகள் சிறப்பாக அமையும். 

வாழும் வரையிலும் போராடிக்கொண்டிருக்காமல் அதனை எப்படி நிவர்த்தி செய்து வெளியில் வருவது என்று அறிந்து, அதனை செயல்படுத்துவது நல்லது. அரசியலில் ஈடுபாடு இருந்தாலும் அதில் கவனம் செலுத்துவதை குறைத்து கொள்வீர்கள். நண்பர் தொடர்பு இருந்தால் உங்களுக்கு செலவு தானே அமையும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும். அன்பர்களுக்கு வெளிநாட்டு வேலை உறுதி செய்யபடும். மேலும் விசா கிடைக்க சற்று தாமதமாகும். எனினும் வெளிநாட்டுப் பயணம் சிலருக்கு உறுதியாகும். நல்ல தொழில் வாய்ப்புகள் வந்தால் அதனை பயன்படுத்திக்கொள்வது நல்லது. யாரையும் நம்பி கொண்டிருக்காமல் களத்தில் இறங்கி வேலை செய்வது சால சிறந்தது. தொண்டு நிறுவனத்தில் உங்களின் பங்கு பயனுள்ளதாக அமையும். 

உங்களின் யோகாதிபதி சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பார்வை இடுவது உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிறருக்கு உதவி செய்வதை பெரும் பாக்கியமாக கருதி செயல்படுவீர்கள். மன வலிமையே உங்களின் அனைத்து காரியத்திற்கும் வெற்றியை பெற்று தரும். சாதுர்யமாக எதையும் பேசி சாதித்துக் கொள்வீர்கள். மாற்று ஏற்பாடுகளை செய்து உடனே எதையும் சரி செய்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

12.09.2025 வெள்ளி இரவு 10.05 முதல் 14.09.2025 ஞாயிறு இரவு 12.36 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து துவரை கலந்த உணவு தயாரித்து நைவேத்தியம் செய்து நெய் தீபமேற்றி வணங்கி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

விருச்சிகம்

தைரியமும் துணிச்சலும் கொண்டு எதையும் செயல்படுத்தும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது சிறப்பான நற்பலனை பெற்று தரும். உங்களின் ராசிக்கு யோகாதிபதி சந்திரன் ராசியில் அமர்வது சிறப்பான பலன்களை பெற்று தரும். சுறுசுறுப்புடன் எப்பொழுதும் இயங்கும். உங்களின் செயல்பாடுகள் சற்று தாமதமாக செயல்படவது மன அழுத்தத்தை தரும். எதையும் கவனமுடன் செய்வீர்கள்.

எதையும் குறுக்கு வழியில் செய்ய வேண்டுமென்று நினைக்கமாட்டீர்கள். உங்களின் நேர்மை உங்களின் கடமை உணர்வு செயலில் உறுதி தன்மை எத்தனை சோதனைகள் வந்தாலும் அனைத்திலும் உங்களின் நம்பிக்கைக்கு கிடைக்கும் வெற்றியே சரியான தீர்வாக இருக்கும். சோதனை காலங்களில் அதை பற்றி சிந்திக்காமல் உங்களின் பணியை ஏற்று நடப்பீர்கள். 

புதிய திட்டங்களை சிறிது காலம் தள்ளி போட்டு அடுத்த மாதம் துவங்குவது நல்லது. அட்டம குருவாக இருந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பணபலத்தை கொடுக்கும். தேவைகள் அறிந்து அதற்கான வருமானம் கிடைக்க பெறுவீர்கள்.

அரசியலில் விருப்பம் இல்லை என்றாலும் அதன் தொடர்பான நண்பர்களுடன் தீராத பகைமை உண்டாகும். கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய விருதுகளும், பாராட்டுகளும் சிறப்பான பலனை பெற்று தரும். உங்களின் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சி பெற்று இருப்பதால் தொழிலில் திக் பலம் பெற்று அரசு சார்ந்த உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். லாபாதிபதி புதனுடன் இணைவு பெற வாய்ப்புகள் அமையும்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள். வெளியூர், வெளிநாடுகளில் வேலை, வெளிநாட்டு கூட்டு தொழில் இனி நன்றாக இருக்கும். சோதனை காலங்களில் சிலருக்கு பதில் சொல்ல துணிச்சல் உண்டாகும். எதை நினைத்து செயல்பட்டீர்களோ! அதுவே உங்களை செயல்பட செய்யும். பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள வழி கிடைக்கும். பல நாள் கடன் தொல்லை மீண்டு வர வாய்ப்பு அமையும் உறவுகளின் விரிசல் மறையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

14.09.2025 ஞாயிறு இரவு 12.37 முதல் 17.09.2025 புதன் கிழமை அதிகாலை 04.07 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் நவகிரக வலம் வந்து பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு புளி சாதம் செய்து வரும் பக்தர்களுக்கு தானம் செய்து வர தடைகள் நீங்கி சுபீட்சம் பெறலாம்.

தனுசு

அனைத்து விடயங்களிலும் தன்னால் முடிந்ததை செய்யும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெற்று பலம் பெறுவதும். உங்களின் யோகாதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதும் வளமான வலிமை பெற்று விளங்குவீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்வது தொழிலில் முன்னேற்றம் பெற செய்வார்.

உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமான உங்களின் செயல்பாடுகள் அமையும். எதையும் உறுதியுடன் செய்து வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பி எதிலும் செயல்படாமல் உங்களை மட்டும் நம்பி இருப்பீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்தவர்கள் இணைவார்கள். முன் பின் முரண்பாடுகளுடன் இருந்தவர்கள் கூட உங்களிடம் இனி இணக்கமாக இருப்பார்கள். நல்ல விடயங்களை செய்வதற்கு முன் அனுபவசாலிகளிடம் சில ஆலோசனைகளை கேட்டு பெறுவீர்கள். உடல் நலன் பற்றி சற்று கவனம் செலுத்துவீர்கள். முக்கியமான சில காரியங்களை செய்வதற்கு தயக்கம் காட்டி காலம் தாழ்த்துவீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி புதன், சூரியனுடன் இணைவு பெறுவதும், தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து சுகஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுவது, உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். நல்ல காலம் தொடங்கிவிட்டதால் இனி துணிவுடன் எதையும் செய்யலாம். பொது நல சேவைகளில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சுய முயற்சிகளால் வாய்ப்பு அமையும். எதிலும்  கருத்து ஒற்றுமையுடன் செயல்படுவது நல்லது. யாருக்கும் எந்த தீங்கும் செய்ய கூடாது என்று சபதம் எடுத்து செயல்படுவீர்கள். கருத்துகளுக்கு முக்கியத்துவம் தந்து எதையும் வெளிபடையாக பேசுவீர்கள். நல்ல முடிவு எடுத்து வளம் பெறுவீர்கள். சுப முகூர்த்த காலம் என்பதால் நல்ல வரன் சிலருக்கு அமையும். தன்னுடைய தேவைகளுக்கு தகு்நத பண வரவு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு. செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

17.09.2025 புதன் அதிகாலை 04.08 முதல் 19.09.2025 வெள்ளி காலை 09.32 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வண்ண பூ வைத்து இரண்டு நெய் தீபம் ஏற்றி கற்கண்டு வைத்து வேண்டிக்கொள்ள உங்களின் எண்ணம் போல அனைத்து காரியமும் வெற்றியை தரும்.

மகரம்

உண்மையும் நேர்மையும் உறுதியாக கொண்ட மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சுக்கிரன் பார்வை பெறுவதும் ராசிநாதன் தனஸ்தானத்தில் இருந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான நற்பலன் உண்டாகும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கும் அற்புத பலன்களை பெறுவீர்கள். எதையும் கவனமுடன் செய்வீர்கள். ஊக்கம் தரக்கூடிய செயல்களை செய்வீர்கள்.

விரையாதிபதி குரு ஆறாமிடத்தில் மறைவு பெறுவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். முக்கிய காரியங்களில் உங்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் வருவார்கள். பொது நலன் கருதி சிலருக்கு சேவை உணர்வுகள் மேலோங்கும். குறை சொல்லலே முடியாதபடி நடக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். தொழிற்சங்க பொறுப்புகளிலும், தொழிலாளர்களில் மீது அக்கறை கொள்வதிலும் அன்புடன் நடந்து கொள்வீர்கள். மருத்துவ உதவிகளையும், பிரச்சனைகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வமுடன் செயல்படுவீர்கள்.

பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது உங்களின் தொழிலிலும் வேலை வாய்ப்பிலும் உதவி செய்வார். கூட்டு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருப்பது பணபுழக்கம் நன்றாக இருக்கும். சிறிய உதவி கேட்டு செல்லும் உங்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெளியூரிலும், வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகளை செய்வீர்கள். தங்க நகை வியாபாரிகள் நிகழ்ச்சிகளிலும், விற்பனை செய்யுமிடத்திலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அவபெயர் வர வாய்ப்பு உள்ளதால் யாரையும் நம்பாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் நேர்மையுடன்  நடந்து கொள்வீர்கள். கடும் போட்டியை கூட துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல்நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும் உங்களின் தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு,

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

19.09.2025 வெள்ளிக்கிழமை காலை 09.33 மணி முதல் 21.09.2025 ஞாயிறு மாலை 05.18 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமைகளில் இலுப்பெண்ணெய் தீபம் முருகனுக்கு போட்டுவர இழந்ததை மீண்டும் பெரும் வாய்ப்பை பெறுவீர்கள்.

கும்பம்

திறமையும் அறிவாற்றலும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி ராசியில் ஆட்சி பெற்று அமைவதும் குரு பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும். உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றி பயணம் தொடரும் போது நினைத்தபடி எல்லாம் அமைய வழி கிடைக்கும். சிலர் தன் பிடிவாதத்தால் காரியத்தை தள்ளி போடுவார்கள். சிலர் சுறுசுறுப்பாக இயங்கி மேல் நிலை அடைவார்கள். தனாதிபதியான குரு பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் உடல்நலன் சிறப்பாக இருக்கும். கவலைகளை மறந்து எதிர்கால நலன்களை பற்றி சிந்தனையில் இருப்பீர்கள். 

குரு லாபஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் தொழில் மூலம் பொருளாதார வளம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பாராட்டுதல்கள் பெறுவார்கள். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையின் உங்களுக்கு பக்கத்திலேயே எதிரிகள் இருப்பார்கள். எதை செய்ய கூடாது என்று சொல்வார்களோ… அவர்கள் அதை செய்து காட்டுவார்கள். உடன் இருப்பவர்களை கவனித்து வருவது மிகவம் அவசியம்.

அரசியல் தலைவர்களின் சந்திப்பும், தொடர்பும் உங்களின் எதிர்கால நலனுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கோவில் பணிகளில் சில உதவிகள் செய்வீர்கள். எமக்கு என்று எதையும் சேர்த்து வைக்காமல்.. எல்லோருக்கும் பயன்படும் வகையில் உங்களின் செயல்பாடு அமையும். மாணவர்கள் கல்வியில் மேல்நிலை அடைவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டிருக்காமல் எதையும் செய்யாமல் இருக்கமாட்டீர்கள். 

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கு என்று நினைத்து அதற்கு தகுந்தபடி சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். விளையாட்டுத் துறையில் வளர்ச்சியை பெறுவீர்கள். உறவுகளை புதுப்பித்து கொள்வீர்கள். மனித நேயமுடன் செயல்பட்டு உதவி கரங்களை நீட்டி பல உதவிகளை செய்து தருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, வியாழன்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

21.09.2025 ஞாயிறு மாலை 05.19 முதல் 24.09.2025 புதன் அதிகாலை 03.24 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமைகளில் காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வணங்கி வரவும். செவ்வாய்கிழமை முருகன் வேல் வழிபாடும், சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.

மீனம்

சொல்லிலும் செயலிலும் வல்லமை பெற்று விளங்கும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்வை இடுகிறார். அட்டம ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த இடம் பலம் பெற்று விரையம் வராமலும், தடைவராமலும் பார்வையால் செயல்பட செய்வார். விரைய சனியை குரு பார்வை பெற்று தேவையற்ற செலவுகளை உங்களுக்கு தருவார். நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும். உடல் நலன் நன்றாக இருக்கும்.

எதை தேடி பயணம் செய்கிறீர்களோ.. அதை அடையும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். சரியான நேரத்தில் சரியான பாதையைில் உங்களை வழிநடத்திச் செல்லும் வகையில் எல்லாம் நானே நடக்கும். இடம் விட்டு இடம் பெயர்ச்சி ஆக வேண்டி வரும். மேற்கு, தெற்கு திசையில் குடி இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு திசைக்கு மாறுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகும். 

அட்டமாதிபதி சுக்கிரன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் எப்படிபட்ட போட்டிகளாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள்.

இசை கலைஞர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆலய திருவிழாக்களில் உங்கள் கலை நயம் வெற்றியை பெற்றுத் தரும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொது வாழ்வில் சற்று கவனம் செலுத்தி தற்காத்துக்கொள்ளும் வழிகளை கடைபிடிப்பீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் உங்களின் ராசியையும் தனஸ்தானத்தையும் பார்வை இடுவதால் நினைத்த காரியம் கைகூடும். 

செவ்வாய் பலம் பெறுவதால் புதிய சொத்து வாங்க சிலருக்கு வாய்ப்பு அமையும். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சொத்து விற்று பணம் வரும் வாய்ப்பும் அமையும். எந்த சொத்தும் இல்லாதவருக்கு சொத்து வாங்கும் வாய்ப்பு அமையும். பாக்கியஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சந்திரன் அமர்ந்து மூன்றாமிடத்தை பார்வையிடுவது உங்களின் சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் சிறக்க உதவிகள் பலரின் மூலம் கிடைத்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, ஒரெஞ்ச்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள், செவ்வாய்.

இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:

24.09.2025 புதன் அதிகாலை 03.25 முதல் 26.09.2025 வெள்ளி பகல் 02.59 வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:

ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி சிவப்பு அரளி பூ மாலை சாற்றி எள் கலந்த அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள எல்லாம் சுபமாக அமையும். பொருளாதாரம் பெருகும்.

(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48