பத்தரமுல்லை எம்.டி.எச்.ஜயவர்தன கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு கடந்த (27) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமைதாங்கினார்.
ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாடசாலை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்ற நடைமுறை குறித்த அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும் நோக்கிலும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் குறித்த பாடசாலையும் இணைந்து இந்த அமர்வை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வில் ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் சமன்மலி தினமுனி அவர்களும் கலந்துகொண்டார்.
இங்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் அதன் வகிபாகம் குறித்து விளக்கமளித்தார்.அத்துடன் பாராளுமன்றம் செயற்படும் முறை பற்றியும் அவர் மாணவர்களைத் தெளிவுபடுத்தினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தின் மாதிரியை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மாணவர் பாராளுமன்றங்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்தார். இதன் மூலம், மாணவர்கள் ஜனநாயகத்தின் சிறம்பம்சங்களைப் பற்றி சரியான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பிக்கப்பட்டு சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. இதன் பின்னர் மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள் பதவிச்சத்தியம் செய்துகொண்டனர். அத்துடன், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தமது விடயப்பரப்புக்களை விளக்கியும், எதிர்காலத் திட்டங்களை முன்வைத்தும் உரையாற்றினர்.
இங்கு, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்களை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அணிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் சமன்மலி தினமுனி குறிப்பிடுகையில், இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மாணவர் பாராளுமன்றங்கள் செயலற்றதாக மாற அனுமதிக்கப்படக்கூடாது என்றும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் திறம்பட பெறக்கூடிய மதிப்புகளைப் பெறும் வகையில் மிகவும் சுறுசுறுப்பான மட்டத்தில் இவற்றைப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாணவர்கள் தமது பாடத்திட்டம் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் இரண்டையும் சமநிலையில் பேணுவதன் மூலம், சமூகத்திற்குத் தேவையான சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும் எற்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வலயக் கல்விப் பிரதி பணிப்பாளர் (சமூக விஞ்ஞானம்) வசந்த ஹெட்டிஆரச்சி, எம்.டி.எச்.ஜயவர்தன கல்லூரியின் அதிபர் விஜிதா லக்ஷ்மி லியனகே, பிரதி அதிபர் ஆர்.சி.இத்தமல்கொட ஆகியோரும் கல்லூரியின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM