நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் நிர்மூலமான பல கிராமங்கள் : உயிரிழப்பு 800 ஆக அதிகரிப்பு !

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 04:12 PM
image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கிராமங்கள் அழிவடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 800 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு 2 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாலிபான்களால் முன்னெடுக்கப்படும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, கிழக்கு ஆப்கானிஸ்தானில 6.0 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, அதன் அண்டை நகரான நங்கஹார் (Nangarhar) மாகாணத்திலுள்ள ஜலலாபாத்( Jalalabad) நகருக்கு அருகே குனர் (Kunar) மாகாணத்திலுள்ள சில நகரங்களைத் தாக்கியது. 

இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நங்கஹார் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் நகரிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவில், குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

சுமார் 8 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தையடுத்து பல அதிர்வுகள் பின்னர் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள்ளிருந்து காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32
news-image

கியூபாவில் மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்...

2026-07-15 15:14:24
news-image

தாய்லாந்து விடுதியில் தீ விபத்து :...

2026-07-15 13:04:17
news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10