கடன் - நோய் - எதிரி எனும் மூன்று முக்கிய தொல்லைகளை நீக்குவதற்கான சூட்சும வழிபாடு...!

01 Sep, 2025 | 03:50 PM
image

எம்முடைய வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாகவோ அல்லது விட்டு விட்டோ நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவர்.

இது குடும்பத்தை பொருளாதார ரீதியாக வழிநடத்திச் செல்லும் குடும்பத் தலைவருக்கோ அல்லது குடும்பத் தலைவிக்கோ உளவியல் ரீதியலாக பாரிய சிக்கலை ஏற்படுத்தும். 

என்ன சூட்சமமான காரணம்? என தெரியாமல் தொடர்ந்து ஒரே வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருவார்கள். சிலருக்கு நவீன சிகிச்சையாக இருந்தாலும் .. அதில் முழுமையான நிவாரணம் கிடைக்காமல் தவிப்பர்.

இத்தகைய தருணத்தில் கடனும் ,எதிரிகளும் கைகோர்க்க... என்ன செய்வதென்று தெரியாமல் 'திக்குத் தெரியாத காட்டில் தவிப்பது போல் ' யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மனதளவில் சோர்வை எதிர்கொள்வர்.

இதுபோன்ற தருணங்களில் உங்களை ஆக்கிரமித்து செயல்பட விடாமல் தடுக்கும் நோய்- கடன் -எதிரி- என்ற மூன்று தொல்லைகளிலிருந்தும் முழுமையாக நிவாரணம் பெற எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.  இதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் நிவாரணம் நிச்சயம்.

திருவாதிரை நட்சத்திரத்தினத்தன்று அருகில் உள்ள நாகாபரணம் சூடிய சிவபெருமானுக்கு தேனை அபிசேகத்திற்காக தொடர்ந்து வழங்கி வந்தால்... உங்களது நோய் குணமாகும் அல்லது உங்களது நோய் குணபடுத்துவதற்கான உரிய வைத்தியர்களை சந்திப்பீர்கள் அல்லது அதற்கான பொருத்தமான மாற்று மருத்துவத்தை தெரிவு செய்து, அதில் பயணிப்பீர்.

இந்த பிரார்த்தனையை தொடர்ந்து மூன்று மாதம் - திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நாகாபரணம் சூட்டிய சிவபெருமானை தேனபிஷேகம் செய்து வழிபட்டால்.. உங்களுடைய உடல் நலம் மேம்படும்.

மூன்று மாதம் வரை பொறுத்திருக்க இயலாது என கருதுபவர்கள்.. அஸ்வினி நட்சத்திர தினத்தன்று நீங்கள் நம்பும் சிகிச்சையின் மருந்தியல் சிகிச்சையை தொடங்கினால்.. விரைவில் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

அதனுடன் அஸ்வினி நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள தெற்கு திசை நோக்கி அருள் பாலிக்கும் விநாயகர் பெருமானை தரிசிக்க வேண்டும்.

வாய்ப்பு உள்ளவர்கள் அந்த விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் அல்லது சந்தன காப்பு அலங்காரம் செய்தால் விசேட நன்மை விரைவில் கிட்டும்.

எம்மில் சிலர் அஸ்வினி நட்சத்திர தினம் வரும் நாள் வரை காத்திருக்க இயலாது என கருதுவர். இவர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்தின் முதல் நட்சத்திர தினத்தன்று இதனை மேற்கொண்டால் பலன் உண்டு, உதாரணத்திற்கு நீங்கள் சதய நட்சத்திரமாக இருந்தால் உங்களுக்கு முதல் நட்சத்திரமான அதாவது 27 ஆவது நட்சத்திரமான அவிட்ட நட்சத்திர தினத்தன்று இந்த பிரார்த்தனையை மேற்கொண்டால் உடல் நல விடயத்தில் பூரணமாக நிவாரணம் கிடைக்கும். உடல் நலம் பெற்றாள் கடன்களும், எதிரிகளும் விலகிவிடும்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!

2026-06-05 16:03:16
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-06-04 16:58:05
news-image

மனதின் அச்சம் நீங்குவதற்கான பிரத்யேக வழிமுறை..!

2026-06-03 15:14:02
news-image

வாழ்க்கையில் எப்போதும் அவசியமாகும் எண்கள்..?

2026-06-02 17:58:16
news-image

தன வரவை நாளாந்தம் அதிகரித்துக் கொள்வதற்கான...

2026-06-01 14:30:17
news-image

ஜுன் மாத ராசி பலன்கள் -...

2026-05-31 10:28:57
news-image

பண வரவு தடையின்றி அதிகரிக்க பாவிக்கவேண்டிய...

2026-05-30 15:04:08
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2026-05-29 18:11:53
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக வழிமுறை..!?

2026-05-29 11:54:34
news-image

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்பு...

2026-05-26 13:13:42
news-image

நன்மை பயக்கும் சங்கு வழிபாடு

2026-05-25 15:22:58
news-image

வெற்றிக்கு வழிவகுக்கும் வண்ணங்கள்

2026-05-23 20:13:08