ஹெமாட்டூரியா எனும் குருதியுடனான சிறுநீர் பாதிப்பிற்குரிய சிகிச்சை

01 Sep, 2025 | 03:43 PM
image

நாளாந்தம் இரவு உறக்கத்தை தவிர்த்து ஒவ்வொரு  நான்கு மணி தியாலத்திற்கும் ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற  உணர்வு இயற்கையாக எழும்.

சிலருக்கு இத்தகைய தருணங்களில் சிறுநீர் குருதியுடன் கலந்து வெளியேறினால் அது பாரிய பாதிப்பின் அறிகுறி என்பதை உணர்ந்து கொண்டு, உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிறுநீரக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் வண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது இத்தகைய பாதிப்புடன் குமட்டல், வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டாலோ உங்களுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் ஹெமாட்டூரியா எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்க வேண்டும்.

ஆண் அல்லது பெண் என எந்த பாலினத்தவராக இருந்தாலும் உங்களுடைய சிறுநீரில் குருதி கலந்து வெளியேறினாலோ அல்லது குருதியின் வண்ணத்துடன் சிறுநீர் வெளியேறினாலோ சிறுநீரக நோய் , சிறுநீர்ப்பாதை தொற்று, கல்லீரல் பாதிப்பு போன்ற ஏதேனும் ஒன்று ஏற்பட்டிருக்க கூடும். அதற்கான சிகிச்சை உடனடியாக தேவை என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்று, சிறுநீர்ப்பையில் ஏற்பட்டிருக்கும் கற்கள்,  சிறுநீர்ப் பாதையில் காயம்,  வைரஸ் தொற்று,  அரிய வகை ரத்த உறைவு கோளாறு , சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய், ஏதேனும் வலி நிவாரணிகளை தொடர்ச்சியாக பாவிப்பதால் ஏற்படும் பக்க விளைவு ஆகிய பல்வேறு காரணங்களால் உங்களுடைய  சிறுநீரில் குருதி கலந்து வெளியேறுகிறது என அவதானிக்கலாம்.

பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டாலோ அல்லது எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பையை ஒட்டி இருக்கும் திசு அசாதாரண வளர்ச்சி அடைந்தாலோ இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

இத்தகைய அறிகுறி ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை, குருதி பரிசோதனை, சிறுநீரக திசு பரிசோதனை, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான சில பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் வைத்தியர்கள் இத்தகைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் எதன் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அதற்கான முழுமையான நிவாரண மருந்தியல் சிகிச்சையையும் வைத்தியர்கள் மேற்கொள்கிறார்கள்.

வைத்தியர் குரு பாலாஜி தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பிற்குயிய நவீன...

2026-09-12 15:08:19
news-image

அயோர்ட்டாபைஃபெமரல் எனும் கால் ரத்த நாள...

2026-09-11 17:01:49
news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47