குறிப்பு 1
தற்போது பொதுமக்கள், தனியார் துறையினர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் பெறுவதற்கான சிறந்த காலம் என்று கருதப்படுகிறது. மக்கள் கடன் பெற விரும்பினால், இந்தச் சூழலைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால், திட்டமிடாமல் கடன் பெற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிடக்கூடாது. மக்களின் பொருளாதார வசதி மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கடன் பெறுவது அவசியம். வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
குறிப்பு 2
வங்கி மக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கும் போது, மக்கள் கடன் பெறுவது அதிகரித்து, அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் 10 இலட்சம் ரூபா கடனை வங்கியில் இருந்து பெறுகிறார் என்றால், அவர் அதை ஒரு முதலீடாகவோ, சிறிய வர்த்தகத்தை ஆரம்பிக்கவோ, வீடு கட்டவோ அல்லது ஒரு நிலத்தை வாங்கவோ பயன்படுத்தலாம்.
இதன் மூலம், அவர் பெறும் பணம் அவருக்கு ஒரு சொத்தை உருவாக்க உதவுவதுடன், அந்தப் பணம் மற்றவர்களின் கைகளுக்குச் சென்று பொருளாதாரச் சுழற்சியை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, நிலத்தை விற்றவர் அந்தப் பணத்தை வேறு ஒரு தேவைக்காகப் பயன்படுத்தலாம் அல்லது முதலீடு செய்யலாம். இப்படி, ஒருவரால் வாங்கப்பட்ட 10 இலட்சம் கடன், பொருளாதாரத்தில் கோடிகளாகப் பெருகும் வாய்ப்பு உள்ளது.
ரொபட் அன்டனி
ஒரு நாட்டின் பொருளாதாரம் சுருங்குகிறதா அல்லது விரிவடைகிறதா? வறுமை குறைகிறதா? வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறதா? பொருளாதார வாய்ப்புகள் உருவாகிறதா? போன்றவற்றை மதிப்பிடுவதற்கான மிக முக்கியமான கருவி கடன் ஆகும். ஒரு நாட்டில் வர்த்தக வங்கிகள் மக்களுக்கு எந்த அளவுக்குக் கடன்களை வழங்குகின்றன என்பதைக் கொண்டுதான் நாட்டின் பொருளாதார நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக, வங்கி மக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கும் போது, மக்கள் கடன் பெறுவது அதிகரித்து, அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் 10 இலட்சம் ரூபா கடனை வங்கியில் இருந்து பெறுகிறார் என்றால், அவர் அதை ஒரு முதலீடாகவோ, சிறிய வர்த்தகத்தை ஆரம்பிக்கவோ, வீடு கட்டவோ அல்லது ஒரு நிலத்தை வாங்கவோ பயன்படுத்தலாம்.
இதன் மூலம், அவர் பெறும் பணம் அவருக்கு ஒரு சொத்தை உருவாக்க உதவுவதுடன், அந்தப் பணம் மற்றவர்களின் கைகளுக்குச் சென்று பொருளாதாரச் சுழற்சியை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, நிலத்தை விற்றவர் அந்தப் பணத்தை வேறு ஒரு தேவைக்காகப் பயன்படுத்தலாம் அல்லது முதலீடு செய்யலாம். இப்படி, ஒருவரால் வாங்கப்பட்ட 10 இலட்சம் கடன், பொருளாதாரத்தில் கோடிகளாகப் பெருகும் வாய்ப்பு உள்ளது.
வங்கிகள் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கும் கடன்கள் அதிகரிக்கும்போதுதான் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும், புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும், மக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
இதன் விளைவாக, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன, மக்களின் வருமானம் அதிகரிக்கிறது, துணைத் தொழில்கள் வளர்ச்சியடைகின்றன, வறுமை குறைகிறது, ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. எனவே, வங்கிகள் தனிநபர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் கடன் வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
வட்டி விகிதங்கள்
மக்கள் அதிகளவில் கடன் பெற வேண்டுமெனில், வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். கடன்களுக்கான வட்டி குறையும்போதுதான் மக்கள் கடன் பெற ஆர்வத்துடன் சிந்திப்பார்கள், முயற்சிப்பார்கள்.
இதன் மூலம், அவர்கள் புதிய வர்த்தகத்தை ஆரம்பிக்கவோ, நிலம் வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வாகனம் வாங்கவோ நடவடிக்கை எடுப்பார்கள்.
மாறாக, வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, மக்கள் கடன் பெற ஆர்வம் காட்ட மாட்டார்கள். மாறாக, தங்கள் கையில் இருக்கும் பணத்தை வங்கியில் சேமிக்கவே விரும்புவார்கள். ஏனென்றால், சேமிப்புகளுக்கு அதிக வட்டி கிடைக்கும். இது போன்ற முக்கிய வட்டி விகிதங்களை மத்திய வங்கி தீர்மானிக்கிறது.
2022-ல் பொருளாதார நெருக்கடி, வட்டி வீத அதிகரிப்பு
2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையைத் தொடர்ந்து, பணவீக்கம் கடுமையாக அதிகரித்தது. பொதுவான பணவீக்கம் 70% ஆகவும், உணவுப் பணவீக்கம் 90% ஆகவும் உயர்ந்தன. இதனையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2022 ஏப்ரல் மாதம் மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்தது.
இதன் விளைவாக, வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் 15.5% ஆகவும், கடன்களுக்கான வட்டி விகிதம் 16.5% ஆகவும் சுமார் ஒரு வருடம் நீடித்தன. பின்னர், படிப்படியாக வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டு 7,75 வீதமாக பேணப்படுகிறது.
வட்டி விகித அதிகரிப்பின் விளைவுகள்
மத்திய வங்கி அறிவிக்கும் வட்டி விகிதங்கள் மிகவும் முக்கியமானவை. இலங்கையில் வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் மத்திய வங்கியின் வட்டி விகிதங்களுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்ததால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 25% ஐத் தாண்டின. அதேபோல், நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களும் அதிகரித்தன.
இதனால், மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்வார்கள் என்றும், புதிய கடன்களைப் பெற ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் மத்திய வங்கி எதிர்பார்த்தது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருளாதாரக் கோட்பாடு.
இந்த அணுகுமுறை வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். 2022 நடுப்பகுதியில் 70% ஆக அதிகரித்த பணவீக்கம், 2023 ஆகஸ்டில் 2% ஆகக் குறைந்தது.
ஆனால், வட்டி வீத அதிகரிப்பினால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். குறிப்பாக, வங்கிகளில் கடன் பெற்று வர்த்தகம் செய்தவர்கள், வட்டி வீத அதிகரிப்பால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். கடன் தவணை மற்றும் வட்டித் தொகை மிக அதிகமாக அதிகரித்தது. அதைச் செலுத்த முடியாமல் வர்த்தகர்கள் சிரமப்பட்டனர்.
இதனால், பல சிறிய வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டதோடு, வேலைவாய்ப்புகள் குறைந்தன, வருமானம் குறைந்தது. இதைச் சமாளிக்க முடியாமல் கடந்த காலங்களில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்திடமும், மத்திய வங்கியிடமும் வட்டி வீதங்களைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போதைய பொருளாதார நிலை
தற்போது குறைந்த வட்டி வீதத்தை மத்திய வங்கி பேணுவது பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது, அது நாட்டின் பொருளாதாரத்தைச் சுருங்குவதற்கு வழிவகுக்கும். மாறாக, வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, அது பொருளாதாரம் விரிவடைவதற்கான வாய்ப்பை வழங்கும். வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுப் பேணப்படுவதால், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்குப் புதிய கடன்களைப் பெற்று வர்த்தகம் செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து அல்லது அதிகரிப்பதற்கான காரணம் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்கள் அதிகரிக்கும்போது, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து, வளர்ச்சி ஏற்படும். அப்போது உற்பத்தி அதிகரிக்கும், மக்களிடம் பணம் இருப்பதால் அதிக கொள்முதல்கள் செய்வார்கள்.
இதனால், பொருட்களின் தேவை அதிகரித்து விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் பணவீக்கம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும்போது, மத்திய வங்கி தனது முக்கிய கருவியான வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்கும்.
மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்கும்போது, மக்கள் வங்கிகளிடம் இருந்து அதிக கடன் பெற மாட்டார்கள். மாறாக, தங்கள் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்வார்கள், ஏனெனில் அதற்கு அதிக வட்டி கிடைக்கும். இதன் மூலம், மக்களிடம் இருக்கும் பணம் வங்கிகளை நோக்கி நகர்வதால், பொருட்களின் தேவை குறையும்.
அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே வாங்கப்படும். இதனால், பொருட்களின் விலைகள் குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும். எனவே, பணவீக்கத்தைக் குறைப்பதற்கு மத்திய வங்கி பயன்படுத்தும் முக்கிய கருவியாக இந்த வட்டி வீத அதிகரிப்பு காணப்படுகிறது. அதேபோல், பொருளாதார வளர்ச்சிக்கு வட்டி வீதக் குறைப்பு அவசியம். மத்திய வங்கி இந்த விஷயத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகள்
மத்திய வங்கியின் புதிய புள்ளிவிபரங்களின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்களில் அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு, மத்திய வங்கிக்குக் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கடன்கள் அதிகரிக்கும்பட்சத்தில், மக்கள் அதிக அளவில் கடன் பெறும் போது, பொருளாதார வளர்ச்சி ஏற்படும், வேலைவாய்ப்புகள் உருவாகும், பொருளாதார வாய்ப்புகள் பெருகும், வறுமை குறையும், மக்களின் வருமானம் உயரும்.
அதே சமயம், இந்தச் செயல்பாடு தீவிரமடைந்து, பொருட்களுக்கான தேவை கூடி, விலை அதிகரித்து, பணவீக்கம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த விடயத்தில் ஒரு சமநிலையைப் பேணுவது அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக, பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் இது குறித்துச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். இதற்கான பெரிய பொறுப்பு மத்திய வங்கிக்கு உள்ளது.
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வாகன இறக்குமதியின் மூலம் அதிக வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. எனவே, வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக மக்கள் அதிக அளவில் கடன் பெற்றிருப்பார்கள்.
கடந்த சில மாதங்களில், மக்கள் அதிக அளவில் வாகனங்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, வாகனங்களை வாங்குவதற்காக மக்கள் வங்கிகளில் அதிக கடன் பெறுவார்கள். இதன் மூலம், மத்திய வங்கி கூறியதுபோல், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மக்கள் பெறும் கடன்கள் அதிகரிக்கும்.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெறும் கடன்கள் அதிகரித்துள்ளன. அதேபோல், இரண்டாவது காலாண்டிலும் கடன்கள் அதிகரித்துள்ளன. எனவே, மூன்றாம் காலாண்டிலும் அதிக கடன்கள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெறும் கடன்கள் மூன்றாம் காலாண்டில் குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடக்கக் கூடாது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெறும் கடன்கள் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
அதேபோன்று, பெரு நிறுவனங்கள் பெறும் கடன்களும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் அதிகரித்துள்ளன. எனவே, மூன்றாம் காலாண்டிலும் மேலும் கடன் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கக் கடன்கள்
அரசாங்கத் துறை நிறுவனங்கள் வங்கிகளில் அதிக கடன் பெறுவது குறைய வேண்டும். அரசாங்க நிறுவனங்கள் கடன் பெறுவதை விட, பொதுமக்கள் வங்கிகளில் பெறும் கடன்கள்தான் அதிகரிக்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அரசாங்கம் அதிக அளவில் கடன் பெறும்போது, அதன் கடன் சுமை அதிகரிக்கும்.
இது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. அரசாங்க நிறுவனங்கள் அதிக கடன் பெறும்போது, பொதுமக்களுக்குக் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும். காரணம், வங்கிகள் அரசாங்க நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதை விரும்பும். ஏனெனில், அதிக வட்டி கிடைப்பதோடு, கடன் தவணை எந்தப் பிரச்சினையும் இன்றி கிடைக்கும். இதனால், பொதுமக்களுக்கான கடன் பெறும் நிலைமைகள் குறையும். இது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமாக அமையாது.
பொதுமக்கள், தனியார் துறையினர், மற்றும் சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் அதிக அளவில் வங்கிகளிடம் கடன் பெற வேண்டும். அதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
தற்போது வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்கள் அதிகரித்திருப்பதால், பொருளாதாரச் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, பணவீக்கம் அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
சட்டத்தின்படி, பணவீக்கம் 5% ஐ தாண்டக்கூடாது. எனவே, பணவீக்கம் 5% ஐ நெருங்கும் போது, மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்கும். மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது, பொதுமக்கள், தனியார் துறையினர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் வங்கிகளில் கடன் பெறுவது குறைந்துவிடும். இது பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையாது. எனவே, இதைச் சரியான முறையில் சமநிலைப்படுத்த வேண்டியது அவசியம்.
தற்போது மத்திய வங்கியின் வட்டி விகிதம் 7.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன்கள் மற்றும் வைப்புகள் இரண்டுக்கும் இந்த வட்டி விகிதம் பயன்படுத்தப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியையும், மக்களின் வைப்புகளுக்கான வட்டியையும் தீர்மானிக்கின்றன.
எனவே, தற்போது பொதுமக்கள், தனியார் துறையினர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடன் பெறுவதற்கான சிறந்த காலம் என்று கருதப்படுகிறது.
மக்கள் கடன் பெற விரும்பினால், இந்தச் சூழலைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், திட்டமிடாமல் கடன் பெற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிடக்கூடாது. மக்களின் பொருளாதார வசதி மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கடன் பெறுவது அவசியம். வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
இலங்கையின் கடந்த கால வரலாற்றோடு ஒப்பிடுகையில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், மக்கள் கடன் பெறுவதற்கு ஒரு சிறந்த காலமாக இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மறுபுறம், மத்திய வங்கி இதைச் சரியான முறையில் சமநிலைப்படுத்த வேண்டும். வட்டி விகிதம் குறைவது அவசியம், மேலும் கடன் பெறுவதற்கு ஒரு சிறந்த சூழல் உருவாகியுள்ளது என்பதே உண்மை.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM