ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரிப்பு !

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 12:54 PM
image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 622 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இடிபாடுகளில் இருந்து காயமடைந்தவர்களை உலங்கு வானூர்திகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சுமார் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தாலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆந்த நாட்டு வைத்தியசாலைகளின் புள்ளிவிவரங்களின் படி 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு அமைச்சக செய்தியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் அந்த நாட்டு மீட்பு பணியினரும், வைத்தியத்துறையினரும் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும்...

2026-04-18 18:28:54
news-image

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள்...

2026-04-18 16:56:24
news-image

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:...

2026-04-18 15:40:40
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்:...

2026-04-18 15:07:16
news-image

அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சு பாகிஸ்தானில்...

2026-04-18 12:12:45
news-image

நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு தேவையில்லை...

2026-04-18 11:26:10
news-image

ஹிஸ்புல்லாவுடனான மோதல் இன்னும் முடிவடையவில்லை –...

2026-04-18 10:36:57
news-image

ஹோர்முஸ் நீரிணையில் போர்க்கப்பல்களுக்கு தடை: ஈரான்...

2026-04-18 03:40:14
news-image

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை என...

2026-04-18 03:31:19
news-image

போர்நிறுத்த காலத்தில் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக...

2026-04-17 19:48:53
news-image

இந்தோனேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து ; பயணித்த...

2026-04-17 16:50:06
news-image

தாய்லாந்தில் சோங்க்ரான் பண்டிகை : “ஏழு...

2026-04-17 12:01:00