நுவரெலியா ஸ்ரீநகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத் தேர்த் திருவிழா

01 Sep, 2025 | 12:40 PM
image

நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க ஹாவாஎலிய, ஸ்ரீநகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா நடைபெற்றது. 

ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) ஆரம்பமானது. இரத பவனி  ஆலயத்திலிருந்து அரோகரா கோஷங்களுடன் புறப்பட்டு நுவரெலியா பிரதான  நகர் முழுவதும் வெளிவீதி உலா வந்ததையடுத்து, இன்று திங்கட்கிழமை (1) இரதமானது ஆலயத்தை சென்றடைந்தது.

இவ்வாலயத்தில் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ச்சியாக பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த சனிக்கிழமை (30) பாற்குட பவனி நடைபெற்று, 1008  சங்காபிஷேகம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (31) காலை தீ மிதிப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 

அடுத்து, மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ கருமாரியம்மன், சோமாஸ்கந்த மூர்த்தி, சண்டேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்களின் சிலைகள் தேரில் ஏற்றப்பட்டு, ஐந்து இரதங்களும் நுவரெலியா பிரதான நகரம் முழுவதும் பவனியாக சென்றது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த தேர்த் திருவிழாவின்போது காவடி, பறவைக் காவடி,கற்பூர சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். 

இதனையடுத்து, எதிர்வரும் புதன்கிழமை (3)  தீர்த்தோற்சவமும் கரகம் வீதி உலாவும் நடைபெற்று, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04