ஐ.தே.க. வருடாந்த சம்மேளனத்துக்கு சஜித்துக்கு ரணில் அழைப்பு

01 Sep, 2025 | 12:32 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனம் நடைபெறவுள்ளது. குறித்த சம்மேளனத்தில் பங்கேற்பதா, இல்லையா என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. இன்று (1) இக்கூட்டம் இடம்பெற வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்மேளனத்தில் சஜித் பங்கேற்றால் அது இரு கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என சிலர் தெரிவித்துள்ளனர். 

சஜித் இந்த சம்தேளனத்தில் பங்கேற்கும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியலுக்கு தீர்மானம் மிக்க ஒரு சம்மேளனமாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த சம்மேளனத்துக்கு ஏனைய கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த சம்மேளனத்துக்கான ஆயத்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட முன்மொழிவு, நாளை  புதன்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்களின் தடையை நீக்கவும், அவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளவும் கட்சி தீர்மானித்துள்ளது. இந்த முன்மொழிவும் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். வரும் நாட்களில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கும் வகையில், மாநாட்டை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டது. அந்த வகையில் லேக்ஹவுஸ் கட்டடத்துக்கருகில் உள்ள ஜூபிலி மண்டபத்தில் காலை 9.30க்கு சம்மேளனம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36