கொலன்னாவ மற்றும் முத்துராஜவல எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் நிரப்பிய 251 பௌசர்கள் இன்று காலை வெளியேறியுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் களஞ்சிய டர்மினல்ஸின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் இன்று மாலையளவில் வழமைக்கு திரும்பும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து பணியாளர்களும் இன்று காலை முதல் சேவைக்கு சமுகளித்துள்ளதாக அதன் இணைப்பாளர் ராஜகருணா தெரிவித்தார்.