யாழ் வடமராட்சி  அல்வாய் பகுதியில் இன்று காலை  22 கிலோ கிராம்  கஞ்சாவுடன்  52 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கடற்படையினரின் உதவியுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்த 22 கிலோ கிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.