எதிரிகளின் தொல்லை நீங்குவதற்கான சூட்சும குறிப்பு..!

31 Aug, 2025 | 01:29 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்த வாழ்க்கையில் சந்தோஷம் தரும் நட்பையும், உறவையும் புதிதாக ஏற்படுத்தி கொள்கிறோமோ... இல்லையோ... நாளாந்தம் வெறுப்புகளையும், புறகணிப்புகளையும் எதிர்கொள்கிறோம். இவர்களின் மூலமாக நாளாந்தம் எமக்கு தெரியாமலேயே எதிரிகளை ஏற்படுத்தி கொள்கிறோம்.

ஓர் எல்லைக்கு மேல்.. இந்த மறைமுக மற்றும் நேரடியான எதிரிகளின் தொல்லை - நெருக்கடி - அழுத்தம் - அதிகரிக்கத் தொடங்குகிறது. ஏற்கனவே பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ள எமக்கு இந்த எதிரிகளின் தொல்லை பாரிய உளவியல் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடுவதற்குரிய  சூட்சமமான வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

அமாவாசை தினத்தன்று இரவு  நேரத்தில் ஒரு தேங்காய் மூடியை தீயிட்டு, தணலாக இருக்கும் தருணத்தில் வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் வைத்து விட்டு... அதில் வெண் கடுகு- கல் உப்பு - ஆகிய இரண்டையும் இடது கைகளில் ஏந்தி உங்கள் தலையை மூன்று சுற்று சுற்றி எதிரியின் - அதாவது உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரியின் - பெயரை மனதால் உச்சரித்து,  'அவன் என் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது' என்று பிரார்த்தித்து ,அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். கல் உப்பு தீயில் பட்டவுடன் வெடித்து சிதறும். சிறிது நேரம் காத்திருந்து ... அதன் பிறகு அந்த நெருப்புத் தணல்களை தண்ணீர் ஊற்றி அணைத்து, அதனை சேகரித்து, அருகில் இருக்கும் ஓடும் நதியில் விட்டு விட வேண்டும்.‌

அமாவாசை வரை காத்திருக்க இயலாதவர்கள் ...நெருக்கடி அதிகமாகவும், அழுத்தம் அதிகமாகவும் இருந்தால் ... ஞாயிற்றுக்கிழமைகளில் இதனை செய்தால் உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள்.‌

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37
news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

2026-07-03 16:32:29
news-image

குரு பகவானின் தோஷம் நீக்குவதற்கான எளிய...

2026-07-02 17:50:01