புற்றுநோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தெற்காசிய நாடுகளில் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே தருணத்தில் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
பொதுவாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் சத்திர சிகிச்சை - கீமோதெரபி - கதிர்வீச்சு சிகிச்சை- ஆகிய சிகிச்சைகளை பிரத்யேகமாகவோ... ஒருங்கிணைந்தோ.. வழங்கி நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்.. அவர்களுக்கு எண்டோபிராச்சியல் தெரபி எனும் நவீன கதிர் வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய கதிர் வீச்சு சிகிச்சையின் போது வைத்திய நிபுணர்கள் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியை துல்லியமாக அவதானித்து அங்கு மட்டும் குறைவான தொலைவிற்கு செலுத்தப்படும் பிரத்யேக கதிர் வீச்சு சிகிச்சையை வழங்குவார்கள். இந்த சிகிச்சை மூன்று நிமிடங்கள் முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நீடிக்கும். சிலருக்கு பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தை பொறுத்து முப்பது நாட்கள் வரை இத்தகைய பிரத்யேக நவீன கதிர் வீச்சு சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இத்தகைய நவீன கதிர் வீச்சு சிகிச்சையின் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மட்டும் புற்றுநோய் செல்களை அழிக்கும் வகையில் கதிர் வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை கட்டுபடுத்தி நிவாரணம் அளிக்க இயலும்.
வைத்தியர் சுந்தரம் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM