புதுமுக நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

31 Aug, 2025 | 01:17 PM
image

அறிமுக நாயகன் தேவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'யோலோ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர்கள் அமீர் - சமுத்திரக்கனி - ஆர்.கே.செல்வமணி - ஏ.ஆர்.கே. சரவணன் - சதீஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

அறிமுக இயக்குநர் எஸ். சாம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'யோலோ' எனும் திரைப்படத்தில் தேவ், தேவிகா, படவா கோபி, ஆகாஷ் பிரேம்குமார், பிரவீண், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்ரு, சுவாதி நாயர், பூஜா ஃபியா, சுபா கண்ணன், கலைக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எம். ஆர். மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.

படத்தின் இயக்குநர் எஸ். சாம் பேசுகையில், '' யோலோ- You Only Live Once என சொல்வார்கள். நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்- என்ற கருத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும். நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்க்கையில் நடந்தால்.....?  அது தான் இந்தப் படத்தின் ஃபேண்டஸியான விடயம். இதனை அழகான காதல் திரைப்படமாகவும், இன்றைய தலைமுறையினரின்  வாழ்வியலைப் பதிவு செய்யும் படைப்பாகவும், ரொமாண்டிக் கொமடி ஜேனரில் கொமர்சல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதியன்று திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47