'பீச்சாங்கை' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கண்ணால் காண்பது பொய்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கண்ணால் காண்பது பொய்' எனும் திரைப்படத்தில் கார்த்திக், காயத்ரி ரீமா, ஆராத்யா, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி கே இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஏ. தமிழ்செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஓக்டோபர் மாதத்தில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான கார்த்திக் - கையில் ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதால்... ரசிகர்களிடம் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM