நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் 'குமார சம்பவம்' படத்தின் அப்டேட்ஸ்

31 Aug, 2025 | 01:08 PM
image

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எனும் சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'இது தேவதை நேரமே..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குமார சம்பவம்' எனும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி. எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், அர்ஜய், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜா மணி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை :யாத்திசை' எனும் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

வெளியீட்டிற்காக சரியான தருணத்திற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'இது தேவதை நேரமே... நிறம் மாறுதேன் வானமே..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் எழுத, பின்னணி பாடகர் ஹரிசரண் சேஷாத்திரி மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் தொடங்குவதற்கு முன் உள்ள உரையாடலும், அதனைத் தொடர்ந்து வரும் பாடலும், பாடலுக்கான காணொளியும்... காதலியை காதலிக்கும் காதலனின் உணர்வை மெல்லிசையுடன் விவரிப்பதால் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51