சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (31) நடைபெறுகின்றது.
ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பென் கரன் 79 ஓட்டங்களையும், சீக்கந்தர் ராசா 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி இலங்கை அணிக்கு 278 என்ற ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அதன்படி, இந்த ஒருநாள் தொடரில் தற்போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் செப்டம்பர் 3, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM