வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி ஜ.பி. செனரத் தெரிவித்தார்.

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றள்ளது.

இது பொலிஸார் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் 4 பேர் சட்டவிரோதமாக மரக்கடத்திலில் ஈடுபட்டுள்ளனர் என  நேற்று பிற்பகல் மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலைமையில் செயற்படும் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு சட்டவிரோதமாக கடத்தவிருந்த தேக்கு மரங்கள் ,வாகனம்  உட்பட   4 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த தேக்கு மரங்கள் மொறட்டுவ பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளதாக விசாரணைகளின் பின்னர்   பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை  நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ. பி. செனரத் மேலும் தெரிவித்தார்.