வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்

Published By: Digital Desk 7

27 Jul, 2017 | 12:00 PM
image

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயபூர்வமாக கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

நல்லூரிலுள்ள செங்குந்தர்  மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதமொன்றின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31