திருகோணமலை சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்து நகர் விவசாயிகள் ஐவரையும் விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (30) சீனக் குடா பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.
முத்து நகர் பகுதி விவசாய காணியில் தனியார் நிறுவனத்தினர் பெகோ இயந்திரம் மூலமாக (27) சூரிய மின் சக்தி திட்டம் தொடர்பான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட வேலையில் அங்கு குறித்த விவசாயிகள் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட வேலையில் வாய்த் தகராறு ஆரம்பமானதுடன் பின்னர் கலவரமாகி தனியார் நிறுவன ஊழியர்கள் பொல்லால் விவசாயிகளை தாக்கியுள்ளனர்
இதனை தொடர்ந்து சீனக் குடா பொலிஸாரினால் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர் வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும் பெகோ இயந்திர சாந்தவை கைது செய்யக் கோரியும் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
முத்துநகர் விவசாயிகளை தாக்கிய அரசாங்க குண்டர்களை கைது செய் ,அநியாயமாய் சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய், நிறுவனங்களுக்கு வழங்கிய விவசாய நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடு ,திருகோணமலையின் வளங்கள் சூரையாடப்படுவதை நிறுத்து ,எங்கள் காணிகளை எங்களுக்கு கொடு,கம்பனிகளுக்கு இலாபம் எங்களுக்கு நடுத்தெரு, போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பல போராட்டங்களை நடாத்தி எங்களுக்கு அழுத்து போய் விட்டது ஜனாதிபதி செயலகத்தில் இம் மாதம் 30 ம் திகதிக்குள் தீர்வு தருவோம். அது போன்று பிரதியமைச்சர் மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறியது எதுவும் நடக்கவில்லை .
பெகோ சாந்த அடியாட்களுடன் ஏழு பேர் வந்து எங்கள் விவசாயிகளை தாக்கினர் பொல்லால் அடித்து தாக்கிய பெகோ சாந்த குழுவினரே.
ஆனால் எங்களை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது மதியம் 2.30 மணி தொடக்கம் மாலை ஆறுமணி வரை காத்திருந்தும் புகாரை ஏற்காது கைது செய்தும் வீடு தேடி வந்தும் கைது செய்தார்கள் பொலிஸார் என்பது நடுநிலையாக இவ் விடத்தில் செயற்பட்டிருக்க வேண்டும்.
நடுராத்திரியில் பொலிஸார் வீடு வீடாக சென்று கழிப்பறை வரை நித்திரையில் கைது செய்துள்ளார்கள் .இலஞ்ச ஊழலை ஒழிப்போம் என்று கூறுபவர்கள் எங்கே அநியாயமாக கைது செய்த அப்பாவி விவசாயிகளை உடன் விடுதலை செய்யுங்கள்.
விவசாயிகளை தாக்கியவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பிய அவர்கள் மேலும் தெரிவித்ததாவது ஏழை விவசாயிகளை ஏமாற்றி ஆட்சி நடாத்துகிறார்கள் ஆட்சிக்கு வரு முன் இவர்கள் என்ன கூறினார்கள் தனியார் நிறுவனங்களுக்கு எமது வளங்களை விற்க மாட்டோம் என வாயால் வடை சுட்டவர்கள் இப்போது தாரை வார்க்கின்றனர்.
விவசாயிகளை பாதுகாப்போம் என கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். முத்து நகர் விவசாயிகளை விற்று பிழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 355 விவசாய குடும்பங்களை வீதியில் நிற்க வைத்துள்ளனர் இம் மக்கள் ஜனாதிபதி செயலகம் வரை போராடியுள்ளனர் ஐக்கிய நாடுகள் வரை சென்று தொடர்ந்தும் போராடுவோம்.
அப்பாவி விவசாயிகள் ஐந்து பேரை சிறையில் அடைத்துள்ளனர் நாம் உயிரை கொடுத்தாவது போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM