பேலியகொட - வனவாசல ரயில் நிலையத்தின் அருகில் ரயிலில் மோதுண்டு 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Image result for ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி virakesari

நேற்று மாலை இந்த இளைஞர் கொழும்பில் இருந்து ரபுக்கனை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சடலம் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது