கடுக்கா - திரைப்பட விமர்சனம்

29 Aug, 2025 | 05:54 PM
image

கடுக்கா - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : விஜய் கௌரீஷ் புரொடக்ஷன்ஸ் - நியந்த் மீடியா & டெக்னாலஜி - மலர் மாரி மூவிஸ்

நடிகர்கள்: விஜய் கௌரீஷ், ஆதர்ஷ் மதிநாதன், ஸ்மீகா, சுதா, மஞ்சுநாதன் மற்றும் பலர்.

இயக்கம் : எஸ்.எஸ். முருகராசு

மதிப்பீடு: 2/5

புதுமுக கலைஞர்களின் படைப்புகள் சில தருணங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 'கடுக்கா' படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே திரையுலகினரை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தை சார்ந்த குமாரபாளையம் எனும் பிரபலமான ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமத்தில் வேலை இல்லாத இளைஞரான சிவசாமி ( விஜய் கௌரீஷ்) காதலிக்க பெண்ணை தேடி அலைகிறார். 

இவருடைய நண்பர் சாமியப்பா ( ஆதர்ஷ் மதிநாதன்) இவர் சுவற்றில் விளம்பரங்களுக்காக ஓவியம் வரையும் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார். இவரும் காதலிக்க ஒரு பெண்ணை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். 

இந்தத் தருணத்தில் சிவசாமியின் வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் சுமதி( ஸ்மீகா)  என்ற இளம் பெண் குடி  வருகிறார். சிவசாமி- சுமதியை காதலிக்க தொடங்குகிறார். 

சாமியப்பாவும் சுமதி காதலிக்க தொடங்குகிறார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த சுமதி, பிறகு இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை காதலிக்கிறார். ஒரு புள்ளியில் சிவசாமிக்கும் , சாமியப்பாவிற்கும் தாம் இருவரும் காதலிப்பது ஒரே பெண் தான். 

அது சுமதி தான் என தெரிய வருகிறது. இதற்காக சுமதியை சந்தித்து இருவரும் விளக்கம் கேட்க... சுமதியும் அந்த சூழலுக்கு ஏற்ற ஒரு விளக்கத்தை கொடுத்து, அவர்களின் காதலை தொடர்கிறார். 

சுமதி இருவரையும் காதலிப்பது ஏன்? சுமதி இருவருக்கும் காதல் விடயத்தில் கடுக்கா கொடுப்பது ஏன்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

'கடுக்கா' என்பது தமிழக மக்களிடத்தில் ஏமாற்றுபவர்களை குறிக்கும் குறியீட்டுச் சொல். காதல் & காதலர்கள் விடயத்தில் பெண்கள் 'கடுக்கா' கொடுப்பதன் பின்னணியை இயக்குநர் விவரித்திருப்பது ஒரு பிரிவு ரசிகர்களை 'ஓகே' சொல்ல வைக்கிறது.

எந்த உறவாக இருந்தாலும்... நட்பாக இருந்தாலும்- காதலராக இருந்தாலும்- அறிமுகமானவராக இருந்தாலும் -அறிமுகமற்றவராக இருந்தாலும் - ஒரு பெண்ணை தனிமையில் சந்திக்கும் போது, அவர்களிடம் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபடத் தான் செய்வார்கள். 

ஆண்களின் இந்த வக்கிர மனத்தை பெண்கள் தங்களுடைய அனுபவ அறிவை கொண்டு 'கடுக்கா' மூலமாக எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த திரைப்படம்.

சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் விஜய் கௌரிஷ் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

இவரது நண்பர் சாமியப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆதர்ஷ் மதிநாதன் இதற்கு முன் திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும்... இந்தப் படத்தில் நல்ல வேடத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சுமதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்மீகா கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைகிறார்.

இவர்களைக் கடந்து கதையின் நாயகியான சுமதியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மஞ்சுநாதனின் நடிப்பும், வசன உச்சரிப்பும், மண்ணின் மைந்தரை அசலாக பிரதிபலிக்கிறது.

ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- படத்தொகுப்பாளர்- ஆகியோர் இது சிறிய முதலீட்டு திரைப்படம் என்பதால் அதற்குரிய முழுமையான பங்களிப்பை நேர்த்தியாக வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்கள்-  கதைக்களம் - நிலவியல் பின்னணி- வட்டார மொழி- உடை அலங்காரம்- மக்களின் நாளாந்த வாழ்வியல்- என அனைத்து விடயங்களிலும் தீவிர கவனத்தை செலுத்தி நகைச்சுவை கலந்த படைப்பாக வழங்கியிருப்பதில் இயக்குநர் முருக ராசு வெற்றி பெற்று இருக்கிறார்.

கடுக்கா - பெண்களுக்கான சேஃப்டி பின்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56