சொட்ட சொட்ட நனையுது - திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு: அட்லர் என்டர்டெயின்மென்ட்
நடிகர்கள்: நிஷாந்த் ரூசோ, வர்ஷினி, ஷாலினி, ஆனந்த் பாண்டி, ரோபோ சங்கர், புகழ், ராஜா, யோகி, வினோத் , மற்றும் பலர்.
இயக்கம்: நவீத் எஸ். ஃபரீத்
மதிப்பீடு: 2.5/5
தலை முடி உதிர்வு பாதிப்பை எதிர்கொண்டு, அதன் காரணமாக தன் தோற்றப் பொலிவு குறித்த உளவியல் ரீதியான பலவீனத்தை கொண்ட இளைஞர் ராஜா( நிஷாந்த் ரூசோ).
இதன் காரணமாக அவரை பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் பிரியா ( ஷாலினி) என்ற பெண் இவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்.
திருமண நிச்சயதார்த்தமும், திருமணத்திற்கு முந்தைய நாள் சடங்கான வரவேற்பும் நிறைவடைகிறது. இந்த தருணத்தில் ராஜாவின் நண்பரான ராக்கி ( ராஜா) அவருடைய கைபேசிக்கு சில காணொளிகளை அனுப்புகிறார்.
அந்த காணொளியை பார்த்த பிறகு திருமணத்தை ராஜா நிறுத்துகிறார். அத்துடன் சென்னைக்குச் சென்று தலை முடி உதிர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு அழகான தலைமுடியுடன் மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார்.
இதன் பிறகு சமூக வலைதள மோகம் கொண்ட சுருதி ( வர்ஷினி) என்ற பெண், ராஜாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்.
திருமணத்திற்கு முதல் நாள் எதிர்பாராத விதமாக ராஜாவின் தலை முடி உதிர்விற்கான சிகிச்சை பக்கவிளைவை ஏற்படுத்த, அவர் தலை முடி உதிர்வை சார்ந்த அவலட்சனமானவர் என்ற நிஜ காரணத்தினால்.. சுருதி அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார்.
இந்த தருணத்தில் ராஜா எடுத்த முடிவு என்ன? அந்த திருமணத்தில் பங்கு பற்றும் பிரியா எடுத்த முடிவு என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
சொட்டை தலையுடன் கூடிய தோற்றத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து ராஜா என்ற கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஷாந்த் ரூசோவிற்கும், அதற்கு நேர்த்தியாக ஒப்பனை செய்த ஒப்பனைக் கலைஞருக்கும் முதலில் பெரிய பாராட்டை தெரிவிக்கலாம்.
பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஷாலினி, சுருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வர்ஷினி, மற்றும் திரையில் தோன்றும் பெரும்பாலான சின்னத்திரை நட்சத்திரங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க கடுமையாக பிரயத்தனம் செய்கிறார்கள்.
ஆனால் மிக மிக சில இடங்களில் மட்டுமே அவர்களின் முயற்சிக்கு பார்வையாளர்களிடத்தில் வெற்றி கிட்டுகிறது. கதையிலும்... திரைக்கதையிலும்... உரையாடலிலும்... நகைச்சுவை ததும்புகிறது.
ஆனால் அதனை காட்சி மொழியாக பார்வையாளர்களிடத்தில் கடத்துவதில் தான் படக்குழுவினர் தடுமாறி இருக்கிறார்கள்.
ரஞ்சித் உன்னியின் இசையில் 'ஓரக்கண்ணாலே ... ', 'இன்ஸ்டாகிராம் பெண்ணே.. ' பாடல்கள் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் ரயீஷ் தன் களப்பணியை கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார்.
சொட்ட சொட்ட நனையுது - ஒட்ற மண் தான் ஒட்டும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM