இன்றைய சூழலில் திருமணமான அனைவருக்கும் சொந்தமாக சிறிதளவேனும் காணி வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் காணியின் மதிப்பு - சேமிப்பு- வங்கி கடன் - சிக்கல் - ஆவண குறைபாடு - என பல்வேறு காரணங்களால் காணி வாங்க வேண்டும் என்ற ஆசை கனவாகவே கடந்து கொண்டிருக்கும்.
இந்தத் தருணத்தில் காணி வாங்க விரும்புகிறவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
அவிட்டம் நட்சத்திரமும் , செவ்வாய்க்கிழமையும் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானை வணங்கினால் சொந்த காணி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
அதே தருணத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் எனும் திருத்தலத்திற்கு அவிட்ட நட்சத்திரமும், செவ்வாக்கிழமை இணைந்த நாளன்று சென்று அங்குள்ள முருகப் பெருமானை வணங்கினால்.. சொந்தமாக காணி வாங்க வேண்டும் என்பதில் எத்தகைய சிக்கல் இருந்தாலும் அவை அனைத்தும் பூர்த்தியாகி சொந்த காணி சாத்தியமாகும்.
சிலருக்கு இதற்கான வாய்ப்பு எளிதில் அமையாது. இத்தகைய வாய்ப்பு அமைந்து, நினைவில் இருந்து, பிரத்யேக நாளில் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்றால்.. அதற்கும் ஒரு சூட்சம வழிபாடு உண்டு.
அஸ்வினி அல்லது அசுபதி நட்சத்திர நாளன்று அருகில் இருக்கும் மலை மீது இருக்கும் முருகன் அல்லது சிவன் அல்லது பெருமாளை வணங்கினால்... நீங்கள் செவ்வாய்க்கிழமையும் அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் முருகப்பெருமானை தரிசிப்பதற்கான பாக்கியம் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து சொந்த காணி கனவும் நனவாகும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM