திருகோணமலை மாநகரசபையின் மூன்றாவது சபை அமர்விற்கு கொண்டுவரப்பட்டது புதிதாக உருவாக்கப்பட்ட செங்கோல்

29 Aug, 2025 | 12:41 PM
image

திருகோணமலை மாநகரசபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை (28) மாநகரசபையின் செங்கோல் புதிதாக உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. 

திருகோணமலை மாநகரசபையின் மூன்றாவது சபை அமர்வு மாநகர முதல்வர் க.செல்வராஜா (சுப்ரா)  தலைமையில் நடைபெற்றது.

அமர்வின்போது சபைக்கு கொண்டுவரப்பட்ட செங்கோல் திருகோணமலையின் அடையாளமாக நந்தி உள்வாங்கப்பட்டு, அனைத்து மதங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நான்கு மத தலங்களும் உள்ளடக்கப்பட்டு திருக்குறளை முன்னிறுத்தி தமிழ் பாரம்பரிய கலை கலாச்சாரத்துடன் உருவாக்கப்பட்டு சபையில் முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டது.

மாநகரத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் கிட்டத்தட்ட 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 54 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரம், தேக்கு, பாலை மற்றும் வேம்பு, பித்தலை என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மாநகரசபையினதும், சபையின் ஊடாக  முதல்வரின் அதிகாரச் சின்னமாகச் செங்கோல் விளங்கி வருவதால், செங்கோல் இன்றி மாநகரசபை அமர்வு இடம்பெற முடியாது. 

முதல்வர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே,  படைக்கலசேவிதர் செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து சபையின் செயலாளர் செல்வார்.

சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையின் மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில்  படைக்கலசேவிதரால் செங்கோல் வைக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18