மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் வாவியில் மூழ்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

29 Aug, 2025 | 12:38 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டட்பட்ட மணமுனை பாலத்தின் கீழுள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகார் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்கா தெரிவித்தார்.

கோவில் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான  49 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நேற்று வியாழக்கழமை (28) பகல் 01.00 மணியளவில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தேடிக்கொண்டிருந்த நீலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆற்றில் இறங்கிய இவர்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல்  காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அழைப்பின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற  திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கால்நடைகள் மீது காரைநகரில் அடாவடி ;...

2026-04-21 15:37:21
news-image

பயாகலையில் “குடு சலிந்துவின்” நெருங்கிய சகாக்கள்...

2026-04-21 15:26:29
news-image

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள்...

2026-04-21 15:26:07
news-image

யாழில் போலி காணி உறுதி தயாரிப்பு...

2026-04-21 15:22:29
news-image

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய...

2026-04-21 15:16:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர...

2026-04-21 13:03:48