தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறைத்தண்டனை ராகம – வல்பொல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கே விதிக்கப்பட்டுள்ளது.இதன்போது மகளுக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதனை செலுத்தாவிடின் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி குழந்தையொன்றை பிரசவித்துள்ள நிலையில்,மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனைக்கு பின்னர் குழந்தை சிறுமியின் தந்தையினது என தெரியவந்துள்ளது. 

கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இந்த குற்றச்செயலை புரிந்துள்ள தந்தையின் தற்போதைய வயது 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.