கடவத்தை மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

28 Aug, 2025 | 06:12 PM
image

கடவத்தை மஹாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வானது குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் கடந்த 26ஆம் திகதி  ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாடசாலை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்ற நடைமுறை குறித்த அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும் நோக்கிலும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் குறித்த பாடசாலையும் இணைந்து இந்த அமர்வை ஏற்பாடு செய்திருந்தன. 

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம், ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்திவரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் தொடரின் ஓர் அங்கமாக கடவத்தை மஹாமாயா மகளிர் கல்லூரிக்கான இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தனது மகள் இந்தப் பாடசாலையில் கல்வி பயின்றதாகவும், குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு பாடசாலைப் பருவத்திலிருந்தே தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், இது பாடசாலைச் செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று வாழ்க்கையில் முக்கியமான பண்புகளைச் சேர்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய 10வது பாராளுமன்றம் இன்றுவரை இல்லாத அளவு அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பாராளுமன்றம் என்றும், எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் பாடசாலை மாணவர்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்களைச் சென்றடையும் வகையில் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா இங்கு உரையாற்றுகையில், மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாகக் கிடைக்கும் அனுபவம் வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு சிறந்த அனுபவமாக அமையும் என்றார். சட்டவாக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் வகிபாகம் குறித்து அவர் விரிவான விளக்கமொன்றை மாணவர்களுக்கு வழங்கினார்.

அத்துடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர். அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவியருக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு நன்றியுரையாற்றிய கல்லூரியின் அதிபர் இனோகா குணரத்ன, மாணவர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதில் இந்த நிகழ்ச்சித்திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கடவத்தை மஹாமாயா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36