யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் குறுந்திரைப்பட விழா!

28 Aug, 2025 | 05:37 PM
image

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திரையிடப்படவுள்ளன.

* போர்ச்சூழலில் தனது மகனைப் பாதுகாக்கப் போராடும் ஒரு தந்தையின் பாசப் போராட்டத்தைத் தாங்கிநிற்கும் ‘நான்காம் போர்’, 

* நாட்டின் நிலைமை காரணமாக பல ஆண்டுகளாகத் தனது மகளைக் காணாமலிருந்த தந்தையின் பரிதவிப்பை வெளிப்படுத்தும் ‘அன்பின் நிழல்’,

* அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை மையப்படுத்திய ‘லிசா’, 

* கணவனின்றி தன் மகளோடு வாழும் பெண் எவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறாள் என்பதைச் சொல்லும் ‘கம்பளிப் பூச்சி’, 

* 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மதகுரு ஒருவர் பற்றிய உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இன நல்லிணக்கத்தை எடுத்துக்கூறும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘As a third person’, 

* தாயின் கனவைச் சொல்லும் ‘சப்பாத்து’, 

* ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்குத் தாய் அனுபவிக்கும் வலிகளையும் வேதனைகளையும் கூறும் ‘அந்தக் கணம்’, 

* மலையகத்தில் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ‘வேட்கை’, 

* காணாமல் ஆக்கப்பட்ட போராளி ஒருவரது குடும்பம் எதிர்கொள்ளும் அவலங்களின் கதையான ‘கணையாழி’, 

* மனிதர்களின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் வேளையில் வெவ்வேறு தேவைகளையுடைய இருவர் ஒன்றாகச் சந்தித்துக்கொள்ளும் கதையான ‘Different’ ஆகிய குறுந்திரைப்படங்கள் நாளை திரையிடப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27