எம்மில் பலரும் தங்களின் அனுபவத்தின் ஊடாகவும் அல்லது கற்ற அறிவின் விளைவாகவும் ஒரு சூட்சமமான காரியத்தை செயல்படுத்துவதற்கான முழு திட்டத்தையும் மனதில் வைத்திருப்பர். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான சூழல் என்பது அமையாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கும்.
இவர்களின் எண்ணத்தில் அந்த செயல் திட்டம் பதிவானதால் இவர்களால் அதனைத் தவிர்த்து விட்டு, நாளாந்த வாழ்க்கைக்காக போராட இயலாது. அந்த மனத் தவிப்பு அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.
குறிப்பாக நினைத்ததை சாதிக்க முடியவில்லையே ..! என்ற எண்ணம் ஆதிக்கம் பெற்றதாக இருக்கும். இத்தகைய சூழலில் நீங்கள் நினைத்ததை சாதிப்பதற்கு சூட்சமமான குறிப்பு ஒன்றை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அருளியிருக்கிறார்கள்.
அதாவது நீங்கள் பிறந்த நேரம் என்று ஒன்று இருக்கும். காலை முதல் அடுத்த நாள் காலை வரை ஏதேனும் ஒரு நேரத்தில் தான் நீங்கள் பிறந்திருப்பீர்கள். நீங்கள் பிறந்த தருணம் தான் இந்த பிரபஞ்சத்துடனான தொடர்பு உருவாகிறது. அதனால் நீங்கள் பிறந்த நேரத்தை நாளாந்தம் வரும் அந்த நேரத்தை துல்லியமாக அவதானித்து அந்த ஒரு நிமிடத்தை பாவித்து, நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் இரவு 12 :10 மணி அளவில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என விரும்பினால், நாளாந்தம் இரவு 12 மணி 10 நிமிடத்திற்கு அமைதியான சூழலில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி, உங்களது கோரிக்கையை இந்த பிரபஞ்சத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சிலரால் இதனை சாத்தியப்படுத்த இயலாத நிலை இருக்கும். வேறு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்புவர்.
நீங்கள் வாரத்தில் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு கிழமையில் தான் பிறந்திருப்பீர்கள். அந்த கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அந்தக் கிழமையில் நீங்கள் பிறந்த தருணத்தில் தீப வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் இடம்பெறும் நான்கு அல்லது ஐந்து பிறந்த கிழமைகளில் பிறந்த நேரத்தில் தீப வழிபாட்டை மேற்கொண்டு, இந்த பிரபஞ்சத்திடம் உங்களது கோரிக்கையை சமர்ப்பித்தால் நீங்கள் நினைத்தது விரைவில் நிறைவேறுவதை அனுபவபூர்வமாக கண்டு மகிழ்ச்சியடையலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM