கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பொற்றோலிய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களால் குறித்த ரயில் இடைமறிக்கப்பட்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் அங்கிருந்து அகலமாட்டோமென மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்களை பொலிஸார் அகற்றமுற்படுகையில் பதற்றநிலை உருவாகியது.

இந்நிலையில் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக  இராணுவ ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.