(எம்.நியூட்டன்)
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் கனகராஜா நந்தகுமார் இடமாற்றம் பெற்று, களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளராக நேற்று புதன்கிழமை (28) கடமையேற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த இவர் முன்னதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன் இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சுகாதார நிர்வாகத்துறையில் கடமையாற்றியதோடு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகியாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM