குமார ஜயக்கொடி, வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை? - தயாசிறி ஜயசேகர

27 Aug, 2025 | 06:06 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமின்றி ஆளுந்தரப்பில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அமைச்சர்களான குமார ஜயக்கொடி, வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எடுக்க வேண்டிய அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நாம் செயற்படுவோம்.

நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய ஆதரவாளர்கள் எவரும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவுமில்லை.

அவ்வாறிருக்கையில் அவர்களுக்கெதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்? எதிர்க்கட்சிகள் மீதுள்ள அச்சத்தினாலேயே அனைவரையும் முடக்குவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

முடிந்தால் மக்களை ஒன்று திரட்டுமாறு சவால் விடுத்தனர். அதனை செய்த பின்னர் தற்போது ஒன்று கூடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர். மக்கள் தாமாகவே நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர்.

மாறாக யாரும் அவர்களை திட்டமிட்டு அழைக்கவில்லை. அதனாலேயே அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. யார் எதைக் கூறினாலும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமின்றி ஆளுந்தரப்பில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அமைச்சர்களான குமார ஜயக்கொடி, வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்காக நாமும் காத்திருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம்: தேசிய...

2026-11-14 17:14:47
news-image

மரண விளிம்பிலிருந்த நாட்டை மீட்டெடுத்து பொருளாதாரத்தை...

2026-11-14 17:17:33
news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18