வரலாற்று சிறப்பு வாய்ந்த, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான கிரியைகள் இன்று புதன்கிழமை (27) ஆரம்பமானது.
மிகத் தொன்மையான வழிபாட்டுத்தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டுகாலம் கவனிப்பாரின்றி காணப்பட்டது. இந்நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புனரமைப்புப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடாத்தப்படுவதைத் தொடர்ந்து, மக்களின் வழிபாட்டுக்கு தலமாக விளங்கும்.
அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிபவருமான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதி உதவியினை வழங்கியிருந்த நிலையில் இந்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM